புரட்டாசியில் அசைவம் சாப்பிட கூடாது என்பதற்கான காரணம் என்ன?
பொதுவாக நம் வீட்டுப் பெரியவர்கள் புரட்டாசி மாதத்திற்கு அசைவம் கூடாது என்று கூறுவார்கள்.
உண்மையில் புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவம் உட்கொள்ளக்கூடாது என்று சொல்வதற்கு அறிவியலோடு, ஆன்மிக காரணங்களும் உள்ளது என்று சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம்.
ஆன்மீக காரணம்
ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்திற்குரிய அதிபதி புதன்.
புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது என்பர்.
எனவே, அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருப்பது நல்லது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
அறிவியல் காரணம்
பொதுவாகவே புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
இது வெயில் கால வெப்பத்தைக் காட்டிலும் மோசமானது கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தைக் குறைக்கும். தேவையில்லாது வயிறு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தும்.
அது மட்டுமன்றி சரிவரப் பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்க்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும்.