புத்தாண்டு பலன் – 2019 ரிஷபம்!

0

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்!

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையே அதிகம் விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தேவையற்ற ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் சனி உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும். உங்களது கடன் பிரச்சினைகள் குறையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விருப்பமும் நிறைவேறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கை கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

புத்திர பாக்கியமும் உண்டாவதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். வரும் 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்கள் உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பபாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமானப் பலன்களை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். வெளி வட்டாரத் தொடர்புகளால் அனுகூலங்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு முடக்கங்கள் ஏற்பட்டாலும் லாபங்கள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம்
உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படும் அளவிற்கு உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களால் சற்று மருந்து செலவுகள் ஏற்பட்டாலும் உற்சாகம் குறையாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உணவு விஷயத்தில் கட்டுபாடாக இருந்தால் நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை
குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தாராள தன வரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். வண்டி வாகனம் வாங்கும் யோகமும், வீடுமனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனும் உண்டாகும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் அனுகூலமான பலனை அடைவார்கள் என்றாலும் கூடுதல் பொறுப்புகளும் வேலைபளுவும் சற்று அதிகரித்தே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வும், மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். பேச்சில் சற்று கவனமாக நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். எதிர்பாராத பணவரவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு அமையும். கூட்டு தொழில் செய்பவர்கள் சற்று அலைச்சலை சந்திக்க நேரிடும் என்றாலும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியினை ஏற்படுத்தும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். பெரிய தொகைகளையும் எளிதாக ஈடுபடுத்தி லாபங்களை அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் வெளியாட்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும்.

அரசியல்
உங்களின் செல்வம் செல்வாக்கு உயர கூடிய காலம் என்றாலும் மக்களின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உங்களின் பேச்சுகளுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களால் சற்று அலைச்சல் உண்டாகும்.

விவசாயிகள்
விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பட்டபாட்டிற்கான பலன்களைப் பெற்று விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்க தாமதம் ஆகும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. புழு பூச்சிகளின் தொல்லைகளால் சில வீண் விரயங்களும் உண்டாகும்.

கலைஞர்கள்
தொழிலில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் சிக்கல்கள் குறையும். தடைப்பட்ட பண வரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கும். உடன் இருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளை பெறுவீர்கள். நீங்கள் நடித்த படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும்.

பெண்கள்
குடும்ப வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனம் பூரிப்படையும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து புதிய பொருட்சேர்க்கைகள் உண்டாகும். பணி புரியும் பெண்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற முடியும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற பொழுது போக்குகளில் நேரத்தை செலவழிக்காமல் பாடங்களில் முறையுடன் கவனம் செலுத்துவதால் அனைவரின் ஆதரவையும் பெற முடியும்.

ஜனவரி
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபமும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 04-01-2019 பகல் 12.54 மணி முதல் 07-01-2019 அதிகாலை 00.25 மணி வரை மற்றும் 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை.

பிப்ரவரி
உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவானுக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
சந்திராஷ்டமம் – 31-01-2019 மாலை 06.40 மணி முதல் 03-02-2019 காலை 06.39 மணி வரை மற்றும் 28-02-2019 அதிகாலை 00.46 மணி முதல் 02-03-2019 பகல் 12.40 மணி வரை.

மார்ச்
மாத கோளான சூரியன் சாதகமாக 10, 11-ல் சஞ்சரிப்பதும், 7-ல் குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பலவழிகளில் தேடி வரும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். இம்மாதம் 7-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 27-03-2019 காலை 08.19 மணி முதல் 29-03-2019 இரவு 07.23 மணி வரை.

ஏப்ரல்
இம்மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதும், 10,11-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்தும் நல்ல அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வதால் அவர்களால் நற்பலன்களை பெற முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 23-04-2019 மாலை 05.14 மணி முதல் 26-04-2019 அதிகாலை 03.14 மணி வரை.

மே
உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி, கேது, 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்க்கவும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 21-05-2019 அதிகாலை 02.30 மணி முதல் 23-05-2019 பகல் 11.45 மணி வரை.

ஜுன்
உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, 8-ல் சனி கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 17-06-2019 காலை 10.42 மணி முதல் 19-06-2019 இரவு 08.00 மணி வரை.

ஜுலை
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 14-07-2019 மாலை 05.25 மணி முதல் 17-07-2019 அதிகாலை 03.15 மணி வரை.

ஆகஸ்ட்
இம்மாதம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், சூரியன், 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் நல்ல லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 10-08-2019 இரவு 11.05 மணி முதல் 13-08-2019 காலை 09.25 மணி வரை.

செப்டம்பர்
ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 4, 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். 8-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்து நல்லது.
சந்திராஷ்டமம் – 07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.

அக்டோபர்
ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 04-10-2019 பகல் 12.20 மணி முதல் 06-10-2019 இரவு 09.35 மணி வரை மற்றும் 31-10-2019 இரவு 09.30 மணி முதல் 03-11-2019 அதிகாலை 05.25 மணி வரை.

நவம்பர்
மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும், 10-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். 5-ஆம் தேதி முதல் குரு 8-ஆம் வீட்டில் சஞசாரம் செய்ய இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 28-11-2019 காலை 07.35 மணி முதல் 30-11-2019 பகல் 02.30 மணி வரை.

டிசம்பர்
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்றாலும் 8-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். சிவனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 25-12-2019 மாலை 04.40 மணி முதல் 27-12-2019 இரவு 11.45 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,8.
நிறம் – வெண்மை, நீலம்,
கிழமை – வெள்ளி,சனி
கல் – வைரம்,
திசை – தென்கிழக்கு,
தெய்வம் – விஷ்ணு, லட்சுமி

புத்தாண்டு பலன் – 2019 மேஷம்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த‌ 10 சூழல்களில் ஏன் உற வில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்!
Next articleநீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் செல்போனை எப்படியெல்லாம் புடிப்பீங்க சொல்லுங்க! உங்களை பற்றி நாங்க சொல்றோம்!