புத்தாண்டு பலன் – 2019 மீனம்!

0

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி,ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே, தன்னம்பிக்கை உடையவராகவும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராகவும், நீதி நேர்மை தவறாதவராகவும் விளங்கும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் ராசியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகளை சந்தித்தாலும் லாபங்கள் எந்த வகையிலும் தடைபடாது. வரவேண்டிய வாய்ப்புகளில் சில போட்டிகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகளும், வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் கௌரவ பதவிகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வீடு வாகனங்கள் வாங்க கூடிய அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோயம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத திடீர் பணவரவுகளும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சில மருத்துவ செலவுகள் தோன்றி மறையும். நவீன பொருட்களையும் வாங்க முடியும். ஆடை ஆபரணம் சேரும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமானநிலை இருப்பதால் பெரிய தொகைகளையும் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். இது மட்டுமின்றி நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வம்பு வழக்குகளில் எல்லாம் உங்களுக்கு சாதகமான பலன் உண்டாகும். சிலருக்கு தூரபயணமும் அதன் மூலம் சாதகமும் அனுகூலமும் கிட்டும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும். 5.11.2019 முதல் குரு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத்திற்கு பிறகு எதிலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அவ்வப்போது சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் சிறிது மருத்துவ செலவுகளுக்கு பின் குணமாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வயதில் மூத்தவர்களாலும் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடலாம். தூரத்து உறவினர்கள் அல்லது வயதானவர்கள் மூலம் மன கவலை ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

குடும்பம் பொருளாதாரநிலை
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இதுவரைப் பட்ட கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் நடைபெற கூடிய சுபகாரியங்களும் உங்கள் மன மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மகிழ்ச்சிகரமாக செயல்பட கூடிய வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு தடைப்பட்ட இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேரும் யோகம் உண்டாகும். உத்தியோக உயர்வுகளால் குடும்பத்தின் பொருளாதார நிலையும் உயரும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிரிமிதமான லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள், கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் விலகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் மேலும் மேலும் லாபத்தை கொடுக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு உடையவைகளாலும் லாபம் கிடைக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன், ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுத்த கடன்களும் திருப்தியாக வசூலாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும்.

அரசியல்
அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். செல்வம் செல்வாக்கு உயரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எந்தவித இடையூறுகளும் இன்றி சாதனைகள் புரிவார்கள். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமைந்து அதன் மூலம் அனுகூலமும், பாராட்டுதல்களும் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும்.

விவசாயிகள்
விவசாயிகளுக்கு விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை வரப்பு தகாரறு என சில பிரச்சனைகளை சந்தித்தாலும் பட்ட பாட்டிற்கான பலன் உங்களுக்குச் கிடைத்து விடும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியினை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்குவது, பூமி, மனை வாங்குவது போன்றவற்றில் நற்பலன் அமையும்.

கலைஞர்கள்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வந்து கதவை தட்டும். உங்களை புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களின் வசூலும் சிறப்பாக இருக்கும். போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். கார், பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் கிட்டும்.

பெண்கள்
பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். உற்றார் உறவினர்களிடையே நல்ல பெயரும் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய பொருட் சேர்க்கைகளும், ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மாணவ- மாணவியர்
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். மேற்கல்வியில் புதிய சாதனைகள் செய்ய வாய்ப்பு அமையும். நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழச்சி அளிப்பதாக அமையும். விளையாட்டு துறைகளில் மாநில அளவில் வெற்றி பெற கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக அமையும்.

ஜனவரி
உங்கள் ராசியாதிபதி குரு 9-ல் சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 30-12-2018 இரவு 08.19 மணி முதல் 02-01-2019 அதிகாலை 03.23 மணி வரை மற்றும் 27-01-2019 அதிகாலை 02.39 மணி முதல் 29-01-2019 காலை 08.59 மணி வரை.

பிப்ரவரி
உங்கள் ஜென்ம ராசிக்கு 9-ல் குரு 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களும் கல்வியில் உயர்வடைவார்கள். பிரதோஷகால விரதம் மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 23-02-2019 பகல் 11.27 மணி முதல் 25-02-2019 மாலை 04.42 மணி வரை.

மார்ச்
ராசியாதிபதி குரு 9-ல், சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். 7-ஆம் தேதி முதல் 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகள் சற்று சாதகமற்று செயல்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 22-03-2019 இரவு 10.02 மணி முதல் 25-03-2019 அதிகாலை 01.08 மணி வரை.

ஏப்ரல்
ராசிக்கு 3-ல் செவ்வாய் 10-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 19-04-2019 காலை 08.25 மணி முதல் 21-04-2019 பகல் 11.10 மணி வரை.

மே
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். அசையும் அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 16-05-2019 மாலை 04.58 மணி முதல் 18-05-2019 இரவு 08.30 மணி வரை.

ஜுன்
ராசிக்கு 9-ல் குரு, மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய வல்லமையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 12-06-2019 இரவு 11.20 மணி முதல் 15-06-2019 அதிகாலை 04.02 மணி வரை.

ஜுலை
ராசிக்கு 9-ல் குரு, 5-ல் புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்க கூடும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 10-07-2019 அதிகாலை 04.45 மணி முதல் 12-07-2019 காலை 09.55 மணி வரை.

ஆகஸ்ட்
ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், 9-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய், 17-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமையும். அசையும் அசையா சொத்துக்களாலும் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் சற்றே அலைச்சல்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 06-08-2019 பகல் 11.00 மணி முதல் 08-08-2019 மாலை 03.25 மணி வரை.

செப்டம்பர்
இம்மாதம் 6-ல் செவ்வாய், சூரியன் 9-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன்பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 02-09-2019 இரவு 07.25 மணி முதல் 04-09-2019 இரவு 10.15 மணி வரை மற்றும் 30-09-2019 அதிகாலை 05.45 மணி முதல் 02-10-2019 காலை 07.10 மணி வரை.

அக்டோபர்
ராசியாதிபதி குரு 9-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். முருகனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 27-10-2019 மாலை 04.30 மணி முதல் 29-10-2019 மாலை 05.35 மணி வரை.

நவம்பர்
இம்மாதம் 7-ல் சூரியன் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 5-ஆம் தேதி முதல் ராசியாதிபதி குரு 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கை கால் சோர்வு மந்தநிலை போன்றவை ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 24-11-2019 அதிகாலை 01.45 மணி முதல் 26-11-2019 அதிகாலை 03.45 மணி வரை.

டிசம்பர்
ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 8-ல் செவ்வாய், 10-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் எற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவையற்ற பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். குரு, சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 21-12-2019 காலை 08.25 மணி முதல் 23-12-2019 பகல் 11.50 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9,
கிழமை – வியாழன், ஞாயிறு
திசை – வடகிழக்கு
நிறம் – மஞ்சள், சிவப்பு
கல் – புஷ்ப ராகம்
தெய்வம் – தட்சிணாமூர்த்தி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுத்தாண்டு பலன் – 2019 கும்பம்!
Next articleபுத்தாண்டு பலன் – 2019 விருச்சிகம்!