புத்தாண்டு பலன் – 2019 துலாம்!

0

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே, பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றலும், நேர்மையையே குறிக்கோளாக கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோகக்காரகனாக விளங்கும் சனிபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் வாழ்வில் ஏற்றமிகு பலனை அடைவீர்கள். கேந்திர ஸ்தானமான 4, 10-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு 07.03.2019 முதல் மாறுதலாகி கேது 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றியினைப் பெற முடியும்.

திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுப காரியங்கள் கை கூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். சொந்த வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் அமையும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலமானப் பலன்களை அடைவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

செய்யும் தொழில் வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தி பெருகும். லாபங்களும் திருப்திகரமாக இருக்கும். கூட்டாளிகளும், வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு மனநிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிட்டும். எந்தவொரு பணிகளையும் சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் ஆதரவுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிட்டும்.

உடல் ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்களில் வெற்றியை உண்டாக்கும். அன்றாட செயல்களில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்று உங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். தொலைதூர பயணங்களால் சற்று சோர்வு ஏறபட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை
கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக அமையும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அற்புதமாக இருக்கும். உற்றார் உறவினர்களின் அன்பும், அரவணைப்பும் மகிழ்ச்சியை உண்டாக்கும். வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்து காத்திருந்த சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் வந்து சேரும். செலவுகள் கட்டுகடங்கி இருப்பதால் சேமிக்க முடியும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் ஒத்துழைப்பையும் பெறமுடியும். சிலருக்கு வேண்டிய இட மாற்றங்ககளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்த கால பிரச்சினைகள் விலகி எதிலும் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அமையும். தொழிலை விரிவு செய்யும் நோக்கம் பலன் அளிக்கும். கூட்டுத்தொழில் மிகவும் அற்புதமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகினாலும் போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல்கள் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய தொகைகளும் தடையின்றி வசூலாகும்.

அரசியல்
உங்களின் பெயர், புகழ் உயரும் காலம் ஆகும். தொண்டர்களின் ஆதரவு நற்பலனை உண்டாக்கும். அமைச்சர்களின் ஆதரவும், பெரிய மனிதர்களின் நட்பும் கிடைக்கும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து மக்கள் மத்தியில் உயர்ந்த செல்வாக்கினை பெறுவீர்கள்.

விவசாயிகள்
விவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கு ஏற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பாராத அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்பு செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும்.

கலைஞர்கள்
உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இசை துறையிலும், பாடல் துறையிலும் உள்ளவர்கள் ரசிகர்களின் பேராதரவைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். சுகவாழ்வு, சொகுசுவாழ்வு சிறப்பாக அமையும்.

பெண்கள்
உடல் நிலை அற்புதமாக அமையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். புதிய பொருட் சேர்க்கைகளும் உண்டாகும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகம் செய்பவர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேலும் சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். மந்தநிலை மறையும். நண்பர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். அரசு உதவியும் சலுகைகளும் கிடைக்கும். விளையாட்டு துறையிலும், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி போன்றவற்றிலும் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

ஜனவரி.
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் மேன்மை உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். திருமண சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவவை சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 16-01-2019 இரவு 08.09 மணி முதல் 18-01-2019 இரவு 11.33 மணி வரை.

பிப்ரவரி
புதன் 4,5-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும், ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் திருமண சுப காரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள், எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 13-02-2019 அதிகாலை 04.19 மணி முதல் 15-02-2019 காலை 09.32 மணி வரை.

மார்ச்
ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் சுப காரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் அனுகூலமாக செயல்படுவார்கள். 7-ஆம் தேதி முதல் கேது 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 12-03-2019 காலை 10.24 மணி முதல் 14-03-2019 மாலை 04.58 மணி வரை.

ஏப்ரல்
மாதமுற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்வதாலும் 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.

மே
ராசிக்கு 3-ல் சனி, கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் 7, 8-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்தாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற முடியாமல் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை ஏற்படும். குரு, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 05-05-2019 இரவு 10.30 மணி முதல் 08-05-2019 அதிகாலை 04.15 மணி வரை.

ஜுன்
குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு போன்றவை ஏற்படும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். மற்றவர்களை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 02-06-2019 காலை 06.45 மணி முதல் 04-06-2019 பகல் 11.40 மணி வரை மற்றும் 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.

ஜுலை
ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் முயன்று படிப்பது கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.

ஆகஸ்ட்
ஜென்ம ராசிக்கு 10,11-ல் செவ்வாய், சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 23-08-2019 காலை 08.55 மணி முதல் 25-08-2019 மாலை 04.13 மணி வரை.

செப்டம்பர்
ராசிக்கு 2-ல் குரு, 11-ல் செவ்வாய், சூரியன் சஞ்சாரம் செய்வதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் ஏற்படும். சொந்தவீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 19-09-2019 இரவு 07.28 மணி முதல் 21-09-2019 இரவு 11.40 மணி வரை.

அக்டோபர்
ஜென்ம ராசியில் புதன், 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளியூர், வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 16-10-2019 இரவு 08.45 மணி முதல் 19-10-2019 அதிகாலை 05.25 மணி வரை.

நவம்பர்
ராசியாதிபதி சுக்கிரன் 2-ல், சனி, கேது 3-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 5-ஆம் தேதி முதல் குரு 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைக்கவும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சற்று முழு முயற்சியுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருகனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 13-11-2019 அதிகாலை 03.10 மணி முதல் 15-11-2019 பகல் 11.03 மணி வரை.

டிசம்பர்
ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும், மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குரு 3-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்வதில் மந்தநிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 10-12-2019 பகல் 11.20 மணி முதல் 12-12-2019 மாலை 06.25 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,7,8
நிறம் – வெள்ளை, பச்சை
கிழமை – வெள்ளி, புதன்
திசை – தென் கிழக்கு
கல் – வைரம்
தெய்வம் – லட்சுமி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை!
Next articleபுத்தாண்டு பலன் – 2019 தனுசு!