பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் கறிவேப்பிலை டீ தயாரிக்கும் முறை!

0

பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் கறிவேப்பிலை டீ தயாரிக்கும் முறை!

நமக்கு தெரிந்தது எல்லாம் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பது மட்டுமே.

கறிவேப்பிலை உடலில் பல மாயங்களை செய்யக்கூடியது.

கறிவேப்பிலை உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பழங்காலம் முதலா பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முந்தைய காலத்தில் சில உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பார்களாம்.

முதலில் ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பிலையை போட்டு, அரை மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

முக்கியமாக கறிவேப்பிலை டீயின் முழு பலனைப் பெற வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்போது கறிவேப்பிலை டீ குடிப்பதால் சர்க்கரை நோயாளி பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

கறிவேப்பிலையினது இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்களைத் தூண்டிவிட்டு, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், மருத்துவரின் அனுமதியைப் பெற்று கறிவேப்பிலை டீயைக் குடிக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொடுகு பிரச்சினைக்கு பலரும் அறியாத ஒரு தீர்வு!
Next articleDecember 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 06