பாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு! இது தான் அந்த ரகசியம் !

0
2377

பாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு! இது தான் அந்த ரகசியம் !

பொதுவாக ஒரு லீற்றர் பாலில் அரைவாசிக்கு மேல் தண்ணீர் கலந்து தான் தரப்படுகின்றது. அத்தகைய பாலில் தண்ணீர் கலப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது? மிகச் சுலபம், பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை லேக்டோ மீட்டர் மூலம் இலகுவாக கண்டுபிடித்துவிடலாம். நாம் வாங்கும் பாலில் லேக்டோ மீட்டரை வைத்தால் அது 1.026 எண்ணுக்குக் கீழே காட்டுமாயின் கண்டிப்பாக அப்பாலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சிறிதளவான பாலில் ஒரு சில சொட்டு டிஞ்சர் சேர்ததுப் பார்க்கும் போது உடனடியாக அப்பால் நீல நிறத்தில் மாறுமாயின் அப்பாலில் மாப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்படுகின்றது. மேலும், வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு சில துளிகள் விடும் போது அது அப்படியே தரையில் காணப்படுமாயின் அது தூய பாலாகும். மாறாக, மாவின் கனத்தினால் தரையில் ஓடுமாயின் அது மாப்பொருட்கள் கலந்த பாலாக காணப்படும்.

பாலில் சோப்புத் தூள் கலந்திருப்பதனைக் கண்டறிவதற்கு, ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் பாலை ஊற்றி நன்கு குலுக்கும் போது பொதுவாக நுரை வருவது வழமை. ஆனால், அது வெறும் பாலாக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த நுரை தானாகவே போய் மறைந்துவிடும். மாறாக, அப் பாலில் சோப்புத் தூள் கலக்கப்பட்டிருப்பின் அந்த நுரை மறையாது.

பொதுவாக, பாலில் இரண்டு கரண்டி எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தால், அந்த பால் உடனே திரிந்து விட்டால் அது சுத்தமான பாலாகவும், பால் திரியாது காணப்படின் அது கலப்பட பாலாகவும் கொள்ளப்படும்.

ஒரு சிறிய டம்ளரில் பாலை எடுத்து அதில் பிஎச் காகிதத்தைப் போடும் போது காகிதம் பச்சை நிறமாக மாறுமாயின் அது தூய பாலாகவும், மஞ்சள் அல்லது ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறியிருந்தால் அது ரசாயனப் பொருட்கள் கலந்த பாலாகவும் கொள்ள முடியும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: