பாகிஸ்தான் ‘ஒயிட் வாஷ்! சுழலில் சுருட்டிய லாயன்! சொந்த மண்ணில் பட்டையை கிளப்பிய அவுஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இதன் மூலம் ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்ற பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது அவுஸ்திரேலியா.
முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்ற நிலையில், இரு அணிகள் மோதிய பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி நவம்பர் 29ம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் குவித்தது. வார்னர் 166 ஓட்டங்களுடனும், லபுஸ்சாகனே 126 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
4வது நாள் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளைாயடிய பாகிஸ்தான், லாயன் சுழலில் 239 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!
அவுஸ்திரேலியா தரப்பில் நாதன் லாயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டமிழக்காமல் 335 ஓட்டங்கள் குவித்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 176 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 360 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
நவம்பர் 30ம் திகதி இரண்டாவது நாள் முதல் இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 589 ஓட்டங்களுக்கு டிக்ளர் செய்தது. வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 335 ஓட்டங்களுடனும், வாட் 38 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
418 பந்துகளை சந்தித்த வார்னர், 39 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 335 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் அடிலெய்ட் மைதானத்தில் அதிக ஓட்டங்கள் விளாசிய வீரர் என்ற வரலாறு படைத்தார் வார்னர்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான், இரண்டாவது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
3வது நாள் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 302 ஓட்டங்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா சதம் அடித்தார். அவுஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
287 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிசை தொடர்ந்த பாகிஸ்தான் அணி, 3வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!