பருப்பை ஊறவைக்காமல் சமைக்க கூடாது! ஏன்னு தெரியுமா?
பெரும்பாலானவர்கள் சமைப்பதற்கு முன் பருப்பை ஊற வைக்க மறந்து விடுவர்.
ஆனால், பருப்பை ஊற வைத்துவிட்டு தான் பின்னர் சமைக்க வேண்டும்.
நீங்கள் சமைப்பதற்கு முன் பருப்பு மற்றும் பயறு வகைகளை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
சில பயறு வகைகளில் பைடிக் அமிலம் நிறைந்து உள்ளது.
பைட்டிக் அமிலம் நமது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடைக்கவும், அவற்றை எளிதில் ஜீரணமாக்கவும் செய்யும்.
பருப்பு மற்றும் பயறு வகை தானியங்களை சமைப்பதற்கு முன் ஏன் ஊற வைக்க வேண்டும் என்பது பற்றி பலருக்கும் தெரியாது. பருப்பு வகைகளைப் பொறுத்த வரை எல்லா பருப்புகளும் ஜீரணிக்க எளிதானது தான்.
அதிலும், பாசிப்பருப்பு மிகவும் சுலபமாக ஜீரணமாகிவிடும். பருப்புகளை ஊறவைத்து சமைப்பதன் மூலம் உடலின் தாது உறிஞ்சுதல் வீதத்தை அதிகரிக்க முடியும்.
பருப்புகளை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு அதனை சமைப்பதால், அதில் பைட்டேஸ் என்ற நொதி தூண்டப்படுகிறது.
பைட்டேஸ் நொதி தான் கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாக சத்தைப் பிணைக்க உதவுகிறது.
ஊற வைப்பதன் மூலம் பருப்பில் உள்ள சிக்கலான ஸ்டார்ச் உடைக்கப்படும். இதனால் எளிதில் ஜீரணமாகும்.
ஊற வைக்கும்போது பருப்பில் இருந்து உருவாகும் வாயு உற்பத்தி செய்யும் இரசாயனங்கள் நீக்கப்பட்டு விடும். பெரும்பாலான பருப்பு வகைகளில் ஒலிகோசாக்கரைடுகள் உள்ளன. அவை ஒரு வகையான சிக்கலான சர்க்கரை ஆகும். இது தான் உங்களுக்கு தசை வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்த காரணமாக அமைகிறது.
இதனைக் குறைக்க பருப்பினை ஊற வைத்து சமைப்பதே மிகவும் நல்லது. மேலும், பருப்புகளை ஊறவைத்து சமைப்பதன் மூலம் பருப்பு விரைவில் சமைக்கப்பட்டு விடும்.
பருப்பு ஊறவைத்த தண்ணீரில் டானின்கள் அல்லது பைடிக் அமிலம் போன்றவை நிறைந்து உள்ளதால், அந்தத் தண்ணீரை சமையலில் பயன்படுத்தக் கூடாது.
பலரும் அந்தத் தண்ணீரை சமையலில் பயன்படுத்துவர்.
அது தவறான செயல் ஆகும். அதனைப் பயன்படுத்த சிறந்த வழி அதனை செடிகளுக்கு ஊற்றி விடுவது தான் சரியான வழி.
இதன் மூலம் வீட்டு தாவரங்களுக்கும் சில வகை ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.