மலச்சிக்கல் வந்தால், உடலில் அத்தனை சிக்கல்களும் வந்துவிடும் மலச்சிக்கல் உட்பட இந்த சிக்கலால் அவதிப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவது வேதனை தரும் விஷயமே! இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் சாப்பிட்டு வருவதே என்கிறார்கள் மருத்துவர்கள். இதனை எளிய முறையில் அதுவும் பத்தே நிமிடங்களில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மலச்சிக்கல் மனச்சிக்கல்களை போக்க முடியும் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்தியம்.
அதிகாலைநேரத்தில் 1/2 டீஸ்பூனளவு கடுக்காய்ப் பொடியை எடுத்து இளஞ்சூடான நீரில்சேர்த்து கலக்க வேண்டும். பின் அதனை அப்படி குடித்து விட வேண்டும். அதன் பிறகு தண்ணீரை அதிகம் குடித்தால், தண்ணீரும் சுவையாக இருக்கும். குடித்த அடுத்த ( 10) பத்தே நிமிடங்களில் மலச்சிக்கல் தீர்ந்து, சிறு குடல், பெருங்குடல் இரண்டும் சுத்தமாகும். இந்நேரத்தில் வீட்டிலேயே இருப்பது மிகவும் நல்லது.
ஒரு சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆகவே இதனை உட்கொள்ளும்முன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளலாம்.
இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!