பட்டப் பகலில் கல்லூரிக்குள் புகுந்து பெண்ணுக்கு முகநூல் நண்பன் செய்த காரியம்!

0

பட்டப் பகலில் கல்லூரிக்குள் புகுந்து பெண்ணுக்கு முகநூல் நண்பன் செய்த காரியம்!

தமிழகத்தில் பட்டப்பகலில் இளம் பெண் ஒருவரை, முகநூல் நண்பன் பயிற்சி கல்லூரிக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் வித்யா(18). சார்ஜாவில் எம்.பி.பி.எஸ் படித்து வரும் இவருக்கு, பேஸ் புக் மூலம் சென்னை வடபழனியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற நபர் நண்பராக கிடைத்துள்ளார்.

அதன் பின் இருவரும் குறுச்செய்தி அனுப்புவது, வீடியோ கால் பேசிக் கொள்வது என தொடர்ந்து பேசியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் பிரவீன் குமார் மீது நம்பிக்கை கொண்ட வித்யா, தனது மொபைல் நம்பரையும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து இருவரும் வாட்ஸ் அப் மூலம் பேசியுள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய தாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னை வந்துள்ளார்.

சென்னை வந்த அவர், பிரவீன் குமாரை பார்த்து பேசியுள்ளார். தாய்க்கு சற்று உடல்நிலை சரியானதால், வித்யா மீண்டு சர்ஜாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் பிரவீனிடம் தொடர்ந்து பேசியுள்ளார், பிரவீனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால், அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

தொடர்ந்து டார்ச்சர் செய்ததால், அவனது நம்பரையும் முடக்கியுள்ளார். இருப்பினும் முகநூலில் பிரவீன் குமார் டார்ச்சர் செய்து மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன வித்யா செல்போன் எண்ணை மாற்ற முடியாமலும், முகநூலில் அவனை முடக்க முடியாமலும் தவித்து வந்துள்ளார்.

தாய்க்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதால், வித்யா சமீபத்தில் சென்னைக்கு வந்துள்ளார். இது குறித்த தகவல் பிரவீனுக்கு தெரிய வர, உடனடியாக செல்போன் மூலம் பேசியுள்ளார்.

ஆனால் வித்யா அவருடன் சரிவர பேசாமல் நிராகரித்துள்ளார். சென்னை வந்த வித்யா தனது படிப்பு தொடர்பாக திருமங்கலத்தில் உள்ள ஒரு பயிற்சி கல்லூரியில் சேர்ந்து தினமும் வகுப்புக்கு சென்று வந்தார்.

வழக்கம் போல் நேற்று முன் தினம் வித்யா பயிற்சி வகுப்பிற்கு சென்றுள்ளார். அப்போது வித்யாவின் செல்போனுக்கு பிரவீன் குமார் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், உடனே நீ வெளியே வர வேண்டும்.

நான் வெளியே நிற்கிறேன். இல்லையென்றால் நான் உள்ளே வருவேன் என மிரட்டியுள்ளார்.

வெகு நேரமாகியும் வித்யா வராததால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், பயிற்சி கல்லூரியில் அதிரடியாக புகுந்து வித்யாவை வலுக்கட்டயமாக வெளியே இழுத்து வந்தார். அங்கு காரில் தயாராக நின்றிருந்த அவனது நண்பருடன் வித்யாவை காரில் கடத்தி சென்றார்.

அதன் பின் அவரை காதலிக்க வற்புறுத்தியதுடன், படுக்கைக்கு அழைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வித்யா சத்தம் போட்ட போதும், கொலை செய்து விடுவதாக மிரட்டியதால், அவர் அச்சமடைந்துள்ளார்.

பின்னர், மாலை வித்யாவை அழைத்து அவரது வீட்டு வாசலில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

வீட்டில் இருந்த தாய் வித்யாவின் நடவடிக்கை கண்டு கேள்வி எழுப்பியுள்ளார். வித்யா உண்மையை கூற, அவரின் தாய் உடனடியாக பொலிசில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த பொலிசார் பிரவீன் குமார் மற்றும் அவருக்கு உதவிய சுரேந்தர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகணவன் மனைவி இருவருக்கும் ஒருவரே தாயாகிய அதிசயம்! அப்படி என்ன நடந்தது அவர்களின் வாழ்வில்!
Next articleஇப்போது விமானத்தில் பயணிக்கும் போது நீங்கள் இதையெல்லாம்கூட கேட்டு பெற்றுக்கொள்ள முடியுமாம்!