சாப்பாட்டில் இருக்கும் பச்சை மிளகாயை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிடுறீங்களா? இதை படித்தால் இனி உடனேயே பச்சை மிளகாயை சாப்பிட்டுவிடுவீங்க!

0
8023

சாப்பாட்டில் இருக்கும் பச்சை மிளகாயை தூக்கி எறிந்துவிட்டு சாப்பிடுறீங்களா?

பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸைடுகள், நார்ச்சத்து, விற்றமின் சி, விற்றமின் கே, விற்றமின் ; ஈ மற்றும் இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளதனால், பச்சை மிளகாய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. எனினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற வகையில் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது தவறாகும்.

பச்சை மிளகாயின் பயன்கள்

பச்சை மிளகாயில் உள்ள ஆன்டி ஆக்ஸைடுகள் மற்றும் விற்றமின் சி என்பன நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து புற்றுநோய் ஏற்படுவதனைத் தடுப்பதுடன், முதுமை தோற்றம் உண்டாவதையும் குறைக்கின்றது. மேலும், சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் உணவில் பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிடும் போது சளியின் வீரியம் குறைவடைவதுடன், மூக்கடைப்பு பிரச்சனையும் சரியாகும்.

இயற்கையாகவே பச்சை மிளகாயில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதனால் பெண்கள் உணவில் சேர்த்து கொள்வதுடன், அதிகமாக அடிப்பட்டவர்களும் காயம் அடைந்தவர்களும் உணவில் பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளும் போது வலி தண்டுவடத்தின் மூலம் நேரடியாக மூளையினை தாக்குவதனைத் தடுக்க முடியும்.

நுரையீரல் புற்றுநோய் உண்டாவதை குறைக்க கூடிய தன்மையினைக் கொண்டுள்ளதனால் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உணவில் பச்சை மிளகாய் அதிகமாக சேர்த்து கொள்வது சாலச் சிறந்தது

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை சீராக பேணுவதனால், நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது மிகச் சிறந்த பலனைத் தருவதுடன், குறைந்தளவான கலோரிகள் கொண்ட பச்சை மிளகாயினை; உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் தமது டயட்டில் சேர்த்து கொள்ள முடியும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: