பங்குனி மாதத்தில் கிரஹ பிரவேசம் செய்வதில்லை ஏன் தெரியுமா?

0

புதிய வீடு கட்ட பூமி பூஜை செய்தல், புதிய வீடு வாங்குதல், பால்காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் என குடியிருக்கும் வீடு சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பங்குனியில் செய்வதில்லை.
வீடு கட்ட நாம் வாஸ்து பகவானை வணங்குவது வழக்கம். அவர் பூமிக்குள் தூங்கிக்கொண்டு இருப்பவர். முழித்திருக்கும் நேரம் மிகவும் குறைவு. 36 நிமிடங்களே முழித்திருப்பார் என்கிறார்கள். அந்த நேரத்தை வாஸ்து நேரம் என்கிறோம். அந்த நேரத்தில் வாஸ்து பூஜை செய்து பூமி சம்பந்தமான காரியங்களை தொடங்குவது வழக்கம்.

பங்குனி மாதத்தில் வாஸ்து பகவான் முழிப்பதே இல்லை. பூமிக்கடியில் உறங்கிக்கொண்டே இருப்பார். இதனால் வாஸ்து பூஜை செய்ய இயலாது. மீறி வீடு கட்ட தொடங்கினால் வாஸ்து பகவானின் கோபத்திற்கு உள்ளாக நேரும். செய்யும் செயலில் தடங்கல்கள் ஏற்படும். வீடு சார்ந்த நிகழ்வுகளை இந்த மாதத்தில் நடத்துவதில்லை. இதே விதி ஆனி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களுக்கும் பொருந்தும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்! நன்றாக வறுத்து சாப்பிடுங்க?
Next articleபித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலன்கள் யாரை சேரும்?