வீட்டு வைத்தியம் மருத்துவ டிப்ஸ் நோய்கள் பறந்து ஓடிவிடும்!

0

சுக்கை வாங்கி அதை நன்றாக வறுத்து பொடி செய்து பாலில் கருப்பட்டி போட்டு காபி, டீ சாப்பிடுவதை விட்டுவிட்டு, இதைச் சாப்பிடுவதால், நல்லா பசி எடுக்கிறது. தூக்கம் வருது. சளி பிடிப்பது இல்லை. இப்படி ஏகப்பட்ட குணங்கள் சுக்கிற்கு இருக்கிறது.

மண்டை குடைச்சல் தீர: நொச்சி இலையை, தலையணையாகப் பயன்படுத்த குணமாகும்.

உடல் அரிப்பு நீங்க: வண்ணி மரத்தின் இலையைப் பசும் பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட குணமடையும்.

நன்றாக பசி எடுக்க: விளாம்பழத்தின் கொழுந்து இலைகளைக் கஷாயம் வைத்துக் குடிக்கவும்.

வயிற்றுக்கடுப்பு நீங்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோரில் கலந்து சாப்பிடலாம்.

வழுக்கை மறைய: வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

மூளை சுறுசுறுப்பாக இயங்க: வல்லாரை சாறில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலியைச் சாப்பிட குணமாகும்.

ஆஸ்துமா குணமாக: முசுமுசுக்கைச் சாறு நல்லெண்னையுடன் காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வர பலன் உண்டு.

நெறிகட்டிகள் சரியாக: தழுதாழை இலையைச் சாறு பிழிந்து அதை ஆலிவ் எண்ணையில் வதக்கிக் கட்ட குணமாகும். ப

ல்வலி குணமாக: நந்தியாவட்டை வேரை வாயில் போட்டு மென்று துப்பினால் விரைவில் குணமாகும்.

வீக்கம், வலி போக: ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களிபோல கிளறி இளஞ்சூட்டில் பற்று போட்டால் சரியாகிவிடும்.

உடற்சோர்வு சரியாக: கோதுமை மாவில் கஞ்சி வைத்து மாதவிடாய்க் காலங்களில் சாப்பிட கைமேல் பலன்.

நார்த்தங்காய்: இதை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும், மலச்சிக்கலைப் போக்கும் சக்தி உண்டு.

முருங்கைப் பிஞ்சு: இதை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து இரண்டு வேளை வீதம், 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.

காரட், பீட்ரூட்: சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

வெண்டைக்காய்: உணவில் அடிக்கடி சேர்த்துவர மூளை பலமடையும், கண்கள் குளிர்ச்சியடையும், எலும்பு பலப்படும்.

பேரிக்காய்: தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், இதய படபடப்பு நின்றுவிடும். தக்காளி காய்: இதை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடல் வீக்கம் குறையும், தோல் நோய் குணமாகும்.

சேப்பங்கிழங்கு: உண்ணும் உணவில் வாரம் இரு முறை சேர்த்துக் கொண்டால் நரம்புகள் பலப்படும்.

வெள்ளை பூசணி: மூன்று மாசம் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் இளைத்தவர் பெருக்கலாம். சாறு எடுத்து 100 மி.லி. வீதம் தினமும் சாப்பிட புற்றுநோய் குணமாகும். நீர்கடுப்பு,

நீர் எரிச்சல்: வெங்காயத்தை, பச்சையாக சாப்பிட்டு தண்ணீர் குடிக்க தீரும். உருளைக் கிழங்கு சாறு 1 அவுன்ஸ், எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து கண்ணிற்குக் கீழ் உள்ள கருவளையத்தில் போட்டு வந்தால் குணமாகும். வேப்பங் கொழுந்து கொஞ்சம், விரலி மஞ்சள் 1 துண்டு, சேர்த்து மைய அரைத்து முகத்தில் பூசி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகம் பளப்பளப்பாகிவிடும்.

காரட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால், கண் பார்வை நன்றாகத் தெரியும். முகம், உடம்பு அழகு பெறும். மருதாணி, பீட்ருட், எலுமிச்சை சாறு, தயிர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தலையில் தேய்த்தால், தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரும்.

இளநரை முடி மறைந்துவிடும். உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து அதனுடன் பன்னீர் கலந்து முகத்திற்குத் தடவி வந்தால், முகம் பளப்பளப்பாகிவிடும். பாதங்களுக்கு ஆலிவ் ஆயில் போட்டு மசாஜ் பண்ணினால், பாதம் அழகாக இருக்கும். தலைமுடிக்கு வாரம் ஒரு முறை தயிர் தேய்த்து குளித்து வந்தால், முடி மினுமினுப்பாகிவிடும்.

கை, கால் நகங்களுக்கு ஆலிவ் எண்ணை தடவி வந்தால், நகம் உடையாமல் வளரும். பாகற்காய் சாறு சாப்பிட, சர்க்கரை வியாதி குணமாகும். வற்றல் செய்து வறுத்து உண்டு வர காமாலை, கல்லீரல் குறைபாடு நீங்கும்.

அவரைக்காய்: உணவில் அடிக்கடி சேர்த்து சமைத்து சாப்பிட, இரத்தம் சுத்தமாகும். இரத்த விருத்தி அதிகரிக்கும். ‘‘துளசி, தூதுவளை, கற்பூரவல்லி இவற்றை அலம்பி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் கலந்து குடித்தால் உடம்பு வலி, சளி, இருமல் எல்லாம் போயே போய்விடும். உடம்பிற்கு ஒரு புத்துணர்ச்சி வந்ததுபோல இருக்கும்’’ என்றார். வாரம் ஒரு முறை இதைக் குடித்தால் இருமல், சளி நம்மை அண்டவே அன்டாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகவலையை விடுங்க குறட்டை பிரச்சனைக்கு சிறந்த‌ தீர்வாகும் மஞ்சள்!
Next articleratha kattu vaithiyam in tamil – ரத்த கட்டு குணமாக பாட்டி வைத்தியம்!