நீங்க இதுக்கு முன்ன காட்டு விலங்குகளின் எக்ஸ்ரே போட்டோஸ் பார்த்திருக்கீங்களா! இங்க பாருங்க!

0
643

நம்மள எத்தன பேரு நம்மளோட ஒரிஜினல் எக்ஸ்ரே பார்த்திருப்போம்னு? பெரும்பாலும் நம்மளோட எக்ஸ்ரேவே நாம பார்த்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஏதாச்சும் பெரிய ஆக்ஸிடென்ட், எலும்பு முறிவு, வேறே அதாவது உள்ளுறுப்பு கோளாறு இருந்தாலே ஒழிய யாரும் எக்ஸ்ரே அடுத்து பார்த்திருக்க மாட்டோம். நிச்சயமா ஏதாவது ஒரு இடத்துல, குறைந்தபட்சம் ஹாஸ்பிடல், அல்ல கூகுள் இமேஜ்ல, சோசியல் மீடியாவுல, சினிமாவுலயாவது எக்ஸ்ரே பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு இல்லையா? ஆனா, என்னைக்காவது விலங்குகளோட எக்ஸ்ரே எப்படி இருக்கும்னு நீங்க யோசிச்சிருக்கீங்களா?

நேர்லன்னு மட்டுமில்ல, கண்டிப்பா ஹாஸ்பிடல், கூகுள் இமேஜஸ், சோஷியல் மீடியா, இல்ல சினிமாவுல நாம இத பார்க்க வாய்ப்புகள் அறவே இல்ல. இதப்பத்தி நாம தேடியிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. Oregonங்கிற விலங்குகள் உயிரியல் பூங்காவ சேர்ந்தவங்க. போன அக்டோபர் மாசம் தங்களோட அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்துல, அவங்க விலங்கியல் பூங்காவுல இருந்த விலங்குகள மெடிக்கல் செக்கப் பண்ணப்ப எக்ஸ்ரேவும் எடுத்திருக்காங்க. அதுல அவங்க பார்த்த ஆச்சரியமான படங்கள, ட்விட்டர்ல ஷேர் பண்ணிருக்காங்க. நிஜமாவே, அடடே இப்படியா இருக்கும்னு உச்சுக்கொட்ட வைக்குது அந்த படங்கள்….

ஒரிகன் விலங்கியல் பூங்காவின் பச்சோந்தி -யின் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல் பூங்காவின் மலைப்பாம்பு-ன் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல் பூங்காவின் புலியின் கால்கள்-ன் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல் பூங்காவின் நீர் நாய் வால்-ன் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல் பூங்காவின் முள்ளம்பன்றி-ன் எக்ஸ்ரே புகைப்படம். (முள்ளம்பன்றியின் வயிற்று பகுதியில் தென்படும் உருண்டையானது, வாயுவாகும்.)

ஒரிகன் விலங்கியல் பூங்காவின் Toco Toucan எனும் நீண்ட மூக்கு கொண்ட பறவை-ன் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல்பூங்காவின் Rodrigues Flying Fox எனும் அரிய வரை வவ்வால் -ன் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல்பூங்காவின் கொழுத்த வால் கொண்ட பல்லி-ன் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல் பூங்காவின் Screech Owl எனப்படும் அமெரிக்காவின் அரிய வகை ஆந்தை -ன் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல் பூங்காவின் ஆமை-ன் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல் பூங்காவின் பிரேசிலில் அதிகம் காணப்படும் Three-Banded Armadillo எனும் அரிய வகை விலங்கின் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல் பூங்காவின், வடக்கு பசிபிக் சமுத்திரத்தில் அதிகம் காணப்படும் Wolf Eel எனும் அரிய கடல்வாழ் உயிரினத்தின் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல் பூங்காவின், ப்ளேமிங்கோ-ன் எக்ஸ்ரே புகைப்படம்.

ஒரிகன் விலங்கியல் பூங்காவின், குள்ள வகை கீரிப்பிள்ளை-ன் எக்ஸ்ரே புகைப்படம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபற்கள் விழுந்தது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் ! உங்கள் பற்கள் விழுவது மாதிரி கனவு கண்டால் என்ன நடக்கும் !
Next articleபேஸ்புக்கின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக பேஸ்புக் நிறுவனர் கூறும் ரகசியம் என்ன!