நாளை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கும் சுக்கிர பகவான் இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் அள்ளிக்கொடுக்கப்போகிறாராம்! அதில உங்க ராசி இருக்கா!

0

நாளை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கும் சுக்கிர பகவான் இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் அள்ளிக்கொடுக்கப்போகிறாராம்! அதில உங்க ராசி இருக்கா!

சுக்கிர பகவானின் பெயர்ச்சி என்றாலே அதிர்ஷ்ட பெயர்ச்சியாக தான் இருக்கும். இதனிடையே, வரும் 30-ம் தேதி சனிக்கிழமை அன்று விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாலை 4:26 மணிக்கு பெயர்ச்சியாக இருக்கும் சுக்கிர பகவான் யாருக்கெல்லாம் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க போகிறார் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியினர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பலன்களை பெற போகிறீர்கள். சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கும் சுக்கிர பகவானால் பல்வேறு வெற்றிகளை அடைய கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஆன்மீக சிந்தனைகள் மேம்படும்.

குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் பெருகும். புதிய திட்டங்கள் வெற்றியடையும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மிதுனம்

மிதுன ராசியினர்களுக்கு, அற்புதமான பலன்கள் கிடைக்க இருக்கிறது. இந்த சுக்கிர பெயர்ச்சியால் குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் தீர்வுக்கு வரும். உற்றார் உறவினர்களுடன் இணக்கத்துடன் செல்வது நல்லது. தொழிலில் பங்குதாரர்கள் இடையே ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைத்துறையில் நாட்டம் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுபகாரியத் தடைகள் விலகி நல்ல செய்திகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் கொடுக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியினர்களுக்கு, இந்த சுக்ர பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்று தான் கூற வேண்டும். அன்பு, காதலுக்கு காரகத்துவமாக விளங்கும் சுக்கிர பகவான் கணவன்-மனைவிக்குள் நெருக்கத்தை உண்டாக்க இருக்கிறார்.

திருமண பேச்சுவார்த்தைகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. உங்களை நோக்கி வரும் எத்தகைய சவால்களையும் எளிதாக சமாளித்து வெற்றி அடைவீர்கள்.

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டு. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி

கன்னி ராசியினர்களுக்கு, சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்ட பலன்களை கொடுக்க இருக்கிறது. சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கும் சுக்கிர பகவானால் இதுவரை இருந்து வந்த சில உடல் உபாதைகள் நீங்கும்.

பெற்றோர்களுடைய உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து ஆடம்பரப் பொருள் சேர்க்கை ஏற்படுத்துவீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள்.குடும்பத்துடன் வெளியிட சுற்றுலா பயணங்கள் செல்ல வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசியினர்களுக்கு, சுக்கிர பகவான் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார் எனவே உங்களுடைய கோபங்கள் மறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கொடுக்கும். வீடு, வாகனம் போன்ற விஷயங்களில் எதிர்பார்ப்பதை விட சாதகமான பலன்களை பெறுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு முயற்சி செய்தால் மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை மேம்படும்.

தனுசு

தனுசு ராசியினர்களுக்கு சுக்கிரன் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எல்லா விதங்களிலும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெற போகிறீர்கள். ஆடம்பரப் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடை, அணிகலன்கள் வாங்க கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.

குடும்பத்தில் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை, சச்சரவுகள் தீரும். உங்களுடைய உத்வேகம் மற்றவர்களை எளிதாக கவரும். மேலும், மற்றவர்கள் பாராட்டுக்குறிய செயல்களில் ஈடுபடுவீர்கள்.

விமர்சனங்களை உதறிவிட்டு உங்கள் இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயம். மனதிற்கு பிடித்தவர்கள் மனம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். வீடு, வாகன யோகம் உண்டு. அனைவரையும் அனுசரித்து செல்லும் உங்கள் குணம் அனுகூல பலன் கொடுக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 29.10.2021 Today Rasi Palan 29-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஉணவுப்பஞ்சத்தால் அல்லாடும் நாடு! ஒரு கிலோ வாழைப்பழம் 8000 ரூபாவாம்! எந்த நாட்டில் இந்த விலை தெரியுமா!