நவராத்திரி பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி “சிவசக்தியாக” மாறுகிறாள் ஜகன்மாதா!!

0

ஜகன்மாதா நவராத்திரி பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி “சிவசக்தியாக” உரு மாற்றம் பெறுகின்றாள்;!!

பொதுவாக, ஜகன்மாதா நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்குவதுடன், பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி “சிவசக்தியாக” ஐக்கிய ரூபிணியாக அதாவது அர்த்தநாரீசுவரராக மாறுகின்றாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறாக உள்ளது.

நவராத்திரியின் 9 நாட்களும் துர்க்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபட்டு வருவதுடன், மகா சங்காரமான பேரழிவுக் காலத்தின் இறுதியில்; இறைவன் உலகத்தைச் உருவாக்க விரும்புகின்றபோது இச்சை அதாவது விருப்பம் என்ற சக்தி தோன்றுகின்றது. அதன் பின்னர் அதை எவ்வாறு என்று அறிகின்ற போது ஞானசக்தி அதாவது அறிவு எனும் சக்தி தோன்றுகின்றது. அதன் பின்னர் அவன் கிரியா அதாவது செய்தல் அல்லது ஆக்கல் சக்தியினால் உலகினைப் படைக்கின்றான் என்பதே இந்த நவராத்திரி விழாவினால் விளக்கப்படுகின்றது.

தேவி மீது தீராத பக்தி சிரத்தையுடன் நவராத்திரி வழிபாட்டை புரட்டாசி அமாவாசை முதல் சிற்றின்ப வாழ்கை வாழுவதனைத் தவிர்த்து, உணவை அளவோடு உட்கொண்டு விரதம் இருந்து ஆரம்பித்தல் வேண்டும். இங்கு விரதம் அனுஷ்டிப்போர் அமாவாசையில் ஒரு வேளை உணினை மட்டும் சாப்பிட்டு பிரதமை முதல் பகல் உணவினை சாப்பிடாமல் இரவு பூசை முடிந்த பின்னர் பால் பழம் அல்லது பலகாரம் மட்டும் உண்பது நல்லது.

மகாநவமி அதாவது ஒன்பதாவது நாளாகிய அன்று உபவாசம் அதாவது விரதம் இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்கு முன்னதாக பாரணை செய்தல் வேண்டும். பாரணை செய்வதற்கு போதிய வசதியற்றிருப்போர் முதல் எட்டு நாட்களும் பகல் ஒருவேளை உணவினை மட்டும் சாப்பிட்டு ஒன்பதாவது நாள் பால் பழம் மட்டும் உண்ணலாம்.

விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதாரத்தங்கள் தயாரித்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் மற்றும் இசைக்கருவிகளைப் பராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

இவ்வாறு நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்து தேவியை மகிழ்வித்து நமக்கு வேண்டிய வரங்களை பெற்றுக்கொள்வோம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநவராத்திரி விரதத்தினை கடைப்பிடிப்பதனால் கிடைக்க கூடிய பலன்கள்!!
Next articleகணவர் செய்த கொடுமைகளை கடிதமாக எழுதி இளம் பெண் ஒருவர் தற்கொலை