இந்த 4 சித்த வைத்திய குறிப்புகள் உங்க நரைமுடிக்கு தீர்வு தரும்!

0
3709

நரை முடி இந்த காலகட்டத்தில் ஒரு பேஷன் என்று கருதப்படுகிறது. கருப்பும் வெள்ளையும் கலந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் இப்போது பரவலாக நடைமுறையில் இருக்கும் ஒரு ஸ்டைலாகும் . பிரபல நடிகர்கள் கூட தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் நடமாடுகின்றனர் .

நரை முடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். அல்லது ரசாயன டை பயன்படுத்த தொடங்குவர். ஆனால் நமது இயற்கை முறை தீர்வுகளால் நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை கொண்டு வர முடியும். வாருங்கள்! அதன் விளக்கத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

மருதாணி பேக் : மருதாணி செடிகளில் இருந்து மருதாணி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக விழுதாக்கி கொள்ளுங்கள். இதனுடன் 3 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள். 1 ஸ்பூன் காபி தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிதளவு தயிர் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலந்திடுங்கள். இந்த பேக்கை தலை முடியில் தடவி காய விடுங்கள். நன்றாக காய்ந்தவுடன் மென்மையான ஷாம்பூவால் தலையை அலசுங்கள் .

உருளை கிழங்கு தோல் : 5 உருளை கிழங்கை எடுத்து தோல் உரித்துக் கொள்ளவும் . அந்த தோலை ஒரு கப்பில் போடவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் இந்த தோலை போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்தபின், சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஆறியவுடன் அந்த நீரை வடிகட்டி எடுத்து வைக்கவும். அந்த நீரில் வாசனைக்காக சில துளி சந்தன எண்ணெய்யை கலந்து ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி அழுத்தி மூடவும். தலைக்கு குளித்து முடித்தவுடன், இந்த நீரை கொண்டு தலையை அலசவும்.

ப்ளாக் டீ : 2 ஸ்பூன் டீ தூளை தண்ணீரில் கொதிக்க விடவும். தண்ணீர் அடர்த்தியாக வரும் வரை கொதிக்க விட்டு பின்பு ஆற வைக்கவும். ஆறிய பின் தலையில் இந்த கலவையை தடவவும். சிறிது நேரம் கழித்து நீரால் தலையை அலசவும். டீத்தூள் பயன்படுத்தும்போது ஷாம்பூவால் தலையை அலசக்கூடாது

தேங்காய் மற்றும் எலுமிச்சை: தலைமுடியின் நீளத்திற்கேற்ப 6-8 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை பழத்தின் சாறு 3 ஸ்பூன் சேர்க்கவும். இந்த கலவையை தலையில் தடவவும். 1 மணி நேரம் நன்றாக ஊறியவுடன் மென்மையான ஷாம்பூவால் தலையை அலசவும்.

குறிப்புகள் : முடியின் இயற்கையான கருமை குறையும்போது முடியின் மேல்தோல் மெலிதாகும். இதனால் முடி சொரசொரப்பாக மாறி உடைய நேரிடும். முடியை மென்மையாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஈரப்பதம் உள்ள ஷாம்புக்களை பயன்படுத்துங்கள். இதனால் முடி மென்மையாகும்.

ஷாம்பு பயன்படுத்தும்போது உச்சந்தலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். சூரியனின் கடுமையான தாக்குதல், நரை, மற்றும் இதர மாசுக்களால் பாதிக்கப்படுவது உச்சந்தலை தான்.

மென்மையான கண்டிஷனர் பயன்படுத்துங்கள் . ட்ரயர் பயன்படுத்தும்போது அதிகமான வெப்ப நிலையில் பயன்படுத்த வேண்டாம். நரை முடியை மாற்றி கருமையான முடியை பெற மேலே கூறிய குறிப்புகளை முயற்சித்து பாருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: