உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் அளவற்ற நன்மைகள்!

0

கிஸ்மிஸ் பழம் என்றால் குழந்தைகளோ, பெரியவர்களோ வாயில் போடாமல் நகருவது கடினம். அப்படிப்பட்ட பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு சக்தி கொண்ட உலர் திராட்சை தான் ஹகிஸ்மிஸ் பழம்’ என்பது எம்பில் பலருக்கு தெரியாத ஒரு உண்மையாகும். அபாரமான பல சத்துக்களைக்கொண்டிருக்கும் உலர்திராட்சை, நம் ஆரோக்கியத்துக்கு வழங்கும் பலன்கள் பற்றி நோக்குவோம்.

• முடி உதிர்வு பிரச்சினையை தீர்ப்பதற்கான இரும்புச் சத்தானது 100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் காணப்படுகின்றது.

• முக்கியமாக, பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாக காணப்படுகின்றதனால் பெண்கள் உலர்திராட்சையை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ளும் போது மாதவிடாய்க் கால வலி நீங்குவதுடன், ஆரோக்கியம் கூடி;; ரத்தசோகை போன்ற பிரச்னைகளில் இருந்தும் விடுபட முடியும்.

• தினமும் உலர் திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை அதிலுள்ள இரும்புச்சத்து காரணமாக வெகு விரைவில் அதிகரிக்கும்.

• நான்கு டன் ஃபிரெஷ்ஷான திராட்சைப் பழங்களை நன்கு உலரவைக்கும் போது தண்ணீர் வற்றி, ஒரு டன் உலர்திராட்சைகள் கிடைக்கும். இப்படி உலரவைப்பதன் மூலமாக, இதில் இருந்து நமக்கு எண்ணற்ற நார்ச்சத்துக்கள் கிடைக்கின்றன.

• வெயில் காலத்தில் முகத்தில் ஏற்படக் கூடிய கொப்புளங்கள் உலர்திராட்சை சாப்பிட்டால் நீங்குவதுடன், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும்; தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும்; முகமும் பொலிவு பெறும்.

• நாம் ஒரு வேளை சாப்பிடும் உணவின் அளவில் இருக்கும் 299 கலோரிகளை, 100 கிராம் உலர் திராட்சையைச் சாப்பிடுவதன் மூலம் பெற முடியும்.

• உடலில் இருக்கும் தசைகள் சுருங்கி விரிந்து, நரம்புகள் தூண்டப்படுவதற்கும் இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கும் தேவையான பொட்டாசியம் சத்து உலர்திராட்சையில் அதிகமாக காணப்படுவதனால் நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவி; நல்ல பலன் கிடைக்கும்.

• கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவரும் போது இதிலுள்ள வைட்டமின் ஏ சத்து காரணமாக பார்வைக்குறைபாடு நீங்கி; பார்வைத்திறன் மேம்படும்.

• உலர்திராட்சையில் நார்ச்சத்தும் உள்ளதனால்;, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகின்ற வகையில், சர்க்கரை நோயாளிகளும் உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிட முடியும்.

• புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கக் கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட் திராட்சையை விட இதில் அதிகமாக காணப்படுகின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்கள் உறங்கும் நிலையை வைத்து அவர்களின் குணாதிசயங்களை அறிந்து கொள்ள முடியுமாம். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியலாம்!
Next articleஉடல் சூடு அதிகமாக உள்ளவரா நீங்கள் உடல் சூட்டை 2 நிமிடத்தில் குறைக்க சித்தர் கூறிய வழிகள்! – Udal Soodu Kuraiya Tips In Tamil,