நடைபெறப்போகும் செவ்வாய் சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது!

0

நடைபெறப்போகும் செவ்வாய் சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது!

செவ்வாய் பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஞாயிற்றுக் கிழமை இடம் பெயர இருக்கிறார்கள். செவ்வாய், சுக்கிரன் இரண்டுமே ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், சுகபோக வாழ்க்கை அமைய இவ்விரண்டு கிரகங்கள் நம் ஜாதகத்தில் சரியாக அமைதல் வேண்டும். இந்த வகையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் யாரெல்லாம்? என்பதை தெரிந்து கொள்ளவோம்…

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மற்றும் சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை கொடுக்க இருக்கிறது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர வாய்ப்புகள் உண்டாகும்.

அடுத்து, சுற்றி இருக்கும் பகைவர்களின் தொல்லைகள் ஒழியும். குடும்ப பாரத்தை சுமக்க கூடிய நிலை உருவாகும். சுக்ர பெயர்ச்சியால் இழந்த பொருட்களை மீண்டும் பெற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த செவ்வாய் சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவ செய்யும். திடீர் பணவரவு ஒரு சிலருக்கு கிடைக்கப் பெறும். உங்கள் பேச்சாற்றலால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அழகுணர்ச்சியும், உற்சாகம் தொற்றிக்,கொள்ள முகத்தில் பொலிவு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு அன்பையும், பாசத்தையும் அதிகமாக பொழிவீர்கள்.

மேலும், பொருளாதார நிலை உயர கூடிய வாய்ப்புகளும் உண்டு. இதுவரை இருந்து வந்த சுப காரிய தடைகள் விலகி மனதிற்கு பிடித்த வரன் அமையும். எதையும் முழு முயற்சியோடு செய்தால் வெற்றியை காணக்கூடிய யோகம் உண்டு.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சுகபோக வாழ்க்கையை கொடுக்கும் சுக்கிர பகவான் அள்ளி அள்ளி அதிர்ஷ்டத்தை கொடுக்க இருக்கிறார். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் மாறி தலைகீழாக நல்ல விஷயங்கள் எல்லாம் நடைபெறப் போகிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். செவ்வாய் பகவானால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்த்து மௌனம் காப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிர செவ்வாய் பெயர்ச்சி பெற்றோர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த காரணமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் நினைத்த காரியங்களை சாதித்து வெற்றியும், புகழையும் அடைவீர்கள்.

மேலும், தொழிலில் மற்றவர்களுடைய நன்மதிப்பு பெற போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறைந்து மன நிம்மதி பெருகும். அலங்கார பொருட்களை வாங்குவதற்கான யோகம் உண்டு.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை கொடுக்க இருக்கிறது. மேலும் செவ்வாய் பெயர்ச்சியால் அவ்வப்போது உடல்நல கோளாறுகள் ஏற்பட்டு மறையும். செவ்வாய்க் கிழமைகளில் அங்காரகனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும். பின்னர் குடும்பத்தில் திருமணம் தொடர்பான விஷயங்களில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். தூக்கமின்மை பிரச்சனை தீர்ந்து நிம்மதியான உறக்கம் கொள்வீர்கள்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் முடிவுக்கு வரும். நெருப்பு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். சுக்ர பெயர்ச்சியால் சண்டையிட்டுக் கொண்டிருந்த கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிர செவ்வாய் பெயர்ச்சி சுபயோக பலன்களை கொடுக்க இருக்கிறது. விலை உயர்ந்த ஆபரணங்களையும், நகைகளையும் வாங்கும் யோகம் உண்டு. தேவையற்ற செலவுகளை அதிகமாக செய்வீர்கள். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். வெள்ளிக்கிழமையில் சுக்கிரன் வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் சுக்கிரன் பெயர்ச்சி ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்கப் போகிறது. சில சமயங்களில் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். வருவது வரட்டும் என்கிற மனப்போக்குடன் இருப்பது நிம்மதிக்கு வழிவகுக்கும். வீடு, நிலம் தொடர்பான விஷயங்களில் சுக்கிர பெயர்ச்சியால் சிறந்த ஆதாயம் பெறுவீர்கள். உற்சாகம் கொடுக்கக்கூடிய வகையில் உங்கள் திறமைக்கு உரிய பலன்களையும் பெறுவீர்கள். ஆரோக்கியம் படிப்படியான முன்னேற்றம் காணும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் குறைய வாய்ப்புகள் உண்டு. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். மனம் விட்டு பேசி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்க்கும் பணவரவு சிறப்பாக அமைய இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. புதிய தொழில் வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் இணக்கம் ஏற்படும். செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு தீபமேற்றி வழிபட நல்லது நடக்கும்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த செவ்வாய் மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி சாதகமான அமைப்பை உருவாக்கித் தரும். சுக ஸ்தான அதிபதியாக இருக்கும் சுக்கிரனால் உங்களுக்கு காதல் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அடுத்து, தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் பன்மடங்கு உயரும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் செவ்வாய் பெயர்ச்சி சிறப்பான பலனை கொடுக்க போகிறது. சுக்கிரன் உச்சம் பெற்று ராஜ யோகத்தைக் கொடுக்க இருக்கிறார். திடீரென வெளியிட பயணங்கள் மேற்கொள்வது புதிய பொருட்களை வாங்கிக் குவிப்பதும் நடைபெறும்.

பொருளாதார முன்னேற்றம் படிப்படியாக சீராகி வரும். வரவுக்கு மீறிய செலவுகளும் செலவு குறைவாக வரவும் ஏற்படும் என்பதால் விரக்தியுடன் காணப்படுவீர்கள். அடிக்கடி அம்மன் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுக்கிர பெயர்ச்சியானது எந்த ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தையும், சிலருக்கு மாளவியா யோகத்தையும் தரப்போகிறது!
Next articleஇன்றைய ராசி பலன் 07.09.2021 Today Rasi Palan 07-09-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!