நடிகர் விஜய் சேதுபதி மீது திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார்?

0
177

நடிகர் விஜய் சேதுபதி மீது திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார்?

ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17.03.2019 ல் ஒளிபரப்பப்பட்ட ‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் கோவில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

அதாவது தெய்வங்கள் குளிப்பதைக் காட்டுபவர்கள் ஏன் தெய்வங்களுக்கு உடை மாற்றும் நிகழ்வைக் காட்டுவதில்லை? என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனையாகப் பேசியுள்ளார்.

இதனால் அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் இதுபோன்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதத்தினை கையிலெடுக்கும் திரைப்படத்துறையினர் மற்றும் பிற மதங்களுக்குத் தங்களது நடவடிக்கை ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் அகில இந்திய இந்து மகாசபா வலியுறுத்துகிறது” எனப் புகார் அளித்துள்ளனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: