நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

0

நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.

சனி பகவான் விதியை நிர்ணயம் செய்வார் மகரம், கும்பம் ஆட்சி வீடு, துலாம் உச்ச வீடு, மேஷம் நீச்ச வீடு. சனிபகவான் உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். இது பொதுவான பலன்தான் உங்களின் தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் சற்று மாறுபட வாய்ப்பு உள்ளது.

சனிபகவான் கடந்த 5 ஆண்டு காலமாக மிதுன ராசிக்காரர்களை படாத பாடு படுத்தி வந்தார். கண்டச்சனியால் கவலைப்பட்டீர்கள். அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டீர்கள்.

இனி உங்களின் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் வரப்போகிறது. என்னடா வாழ்க்கை என்று வெறுத்துப்போய் இருக்கும் உங்களுக்கு சனிபகவான் இனி மன நிம்மதியைத் தரப்போகிறார்.

வரும் ஜனவரி மாதம் முதல் சனிபகவானின் பயணம் ஒன்பதாம் வீட்டிற்கு வரப்போகிறது. பாக்ய சனி பலன்களை அள்ளித்தரப்போகிறார் என்பதால் இப்போதே அனுபவிக்க தயாராகுங்கள்.

அஷ்டம சனி காலத்தில் நிறைய அவமானங்களை பட்டு இருப்பீர்கள். கணவன் மனைவி இடையேயான பிரிவினை ஏற்பட்டிருக்கும். ஒரு சிலரோ நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவை சந்தித்து இருப்பீர்கள்.

இனி உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், கஷ்டங்கள் முடியப்போகும் காலம் வந்து விட்டது. இன்னும் சில மாதங்களில் அஷ்டமத்து சனியின் பிடியில் இருந்து விடுபடப்போகிறீர்கள்.

பயம் பதற்றம் நீங்கப்போகிறது. கணவன் மனைவி பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.

கடந்த சில ஆண்டுகாலமாகவே பணப்பிரச்சினை, கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்து வந்த உங்களுடைய பொருளாதார நிலைமை சீரடையப்போகிறது.

பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் இனி உங்களைப் புரிந்து கொள்வார்கள். கடன் பிரச்சினையால் சிலர் தற்கொலை வரை சென்று மீண்டிருப்பீர்கள்.

இனி உங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்கப்போகிறீர்கள். சில மாதங்களில் குரு பார்வையால் நல்ல விஷயங்கள் நடந்திருக்கும்.

எனவே இனி கவலைப்பட வேண்டாம் கஷ்டங்களில் இருந்து கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது.

பள்ளி மாணவர்களுக்கு இனி பாடங்கள் புரியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

வருமானம் அதிகரிக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும். உறவுகளால் ஏற்பட்ட பகைகள் நீங்கும். பழைய நண்பர்களின் உதவி வீடு தேடி வரும்.

திருமண முயற்சிகள் கை கூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். காதலிப்பவர்களுக்கு கல்யாண யோகம் தேடி வரும். பாக்ய சனி நிறைய பதவி உயர்வை தேடித்தரப் போகிறார்.

அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சனி பகவான் கொடுத்த படிப்பினைகள் உங்களுக்கு இனி கை கொடுக்கும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடப்போகிறீர்கள். இனி உங்களுக்கு பொற்காலம்தான்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSeptember 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 15
Next articleஇன்றைய ராசி பலன் 05.09.2022 Today Rasi Palan 05-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!