துலாம் முதல் மீனம் வரை பிறக்கப்போகும் 2022 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! புதிய வருடம் உங்களுக்கு எப்படி அமையப்போகிறது!

0

துலாம் முதல் மீனம் வரை பிறக்கப்போகும் 2022 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! புதிய வருடம் உங்களுக்கு எப்படி அமையப்போகிறது!

துலாம் ராசிக்காரர்களுக்கு!

துலா ராசியினரே! நீங்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். தனாதிபதி செவ்வாய் சஞ்சாரத்தால் பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்துப் பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டு வர பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்; சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15 அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு!

நீங்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பதில் வல்லவர்கள். இந்த மாதம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யத் தயங்கும் வேலையைச் செய்து முடித்து பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களைச் செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்களைக் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தைச் சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு தனாதிபதி குருவின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும்.

அரசியல்துறையினருக்கு பூர்வீகச் சொத்துகள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: வள்ளி தேவசேனா சமேதராக உள்ள முருகப் பெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன், வெள்ளி; சந்திராஷ்டம தினங்கள்: 16, 17 அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10

தனுசு ராசிக்காரர்களுக்கு!

தனுசு ராசியினரே! நீங்கள் தெய்வ நம்பிக்கை அதிகமிக்கவர்கள். இந்த மாதம் மன உறுதி அதிகரிக்கும். சொத்துகளை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும்.

தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.

பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. எனவே அனுசரித்துச் செல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், புதன், வெள்ளி; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி; சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20 அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

மகரம் ராசிக்காரர்களுக்கு!

குடும்பத்தைப் பொறுத்தவரை மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து இணக்கமாக செல்லும் வாய்ப்புகளை கொடுக்கிறது. சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உங்களுடைய முயற்சிகளுக்கு ஊக்குவிப்பார்கள்.

பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால திட்டமிடல் சாதகப் பலனை கொடுக்கும். மாணவர்கள் தங்களுடைய கல்வியில் சிறப்பான முன்னேற்றம் பெற கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது.

பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட கடந்த ஆண்டு முடிய இருக்கிறது. 2022ஆம் ஆண்டில் பொருளாதாரம் கணிசமாக உயர ஆரம்பிக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு உண்டாகும். எவ்வளவு செலவுகள் வந்தாலும், அதனை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வரவும் உண்டு. புதிய முதலீடுகளை தவிர்த்து சேமிப்பை அதிகப்படுத்துவது நல்லது. வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும்.

தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் இருப்பவர்கள் எதிர்பாராத லாபத்தை காண இருக்கிறீர்கள். இதுவரை இழப்புகளை சந்தித்து கொண்டு இருந்த உங்கள் ராசிக்கு இனி வரும் காலங்களில் புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் நல்லதொரு மாற்றத்தை உண்டாக்கும்.

தொழில் ரீதியான இட மாற்றம் குறித்த விஷயங்களில் திட்டமிட்டு செயலாற்றுவது நல்லது. கைதேர்ந்த நிபுணர்களின் ஆலோசனையோடு புதிய தொழில் துவங்குபவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் பெறுவதில் தொடர் போராட்டம் நீடிக்கும்.

மகர ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டு ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக குறையத் துவங்கும். வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் உங்களுடைய உடல் நலம் தேறக் கூடும். மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க சூடான வார்த்தைகளை பிரயோகிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் ஊடல்கள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படக் கூடிய அற்புதமான ஆண்டாக இவ்வாண்டு அமைய இருக்கிறது. திருமணமான புதிய தம்பதிகளுக்கு இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் அருள் உண்டு. விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பரஸ்பர அன்பை நிலைநாட்டி கொள்ளுங்கள். தேவையற்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டு.

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது விளக்கு ஒன்றை புதிதாக வாங்கி அதில் நெய் விட்டு தீபம் ஏற்றி வைத்து வாருங்கள். தடைகள் நீங்கி வெற்றி பெறுவதற்கு முச்சந்தி பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது சிறப்பு! மேலும் உங்கள் ராசிக்கு நீர் தானம், நீர்மோர் தானம் போன்ற குளிர்ச்சியான விஷயங்களை தானம் கொடுத்து வருவது வெற்றியை அடைய செய்யும்.

கும்பம் ராசிக்காரர்களுக்கு!

குடும்பத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவ இருக்கிறது. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.

போதுமான நேரத்தை குடும்பத்திற்காக செலவிடுவது நல்லது. இவ்வாண்டு உங்களுக்கு எதிர்பாராத திடீர் நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்க இருக்கிறது. புதிய நபரின் வருகை உண்டு. குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. மாணவர்கள் தங்களுடைய திறமையை மேலும் வளர்த்துக் கொள்வார்கள். எதையும் அதன் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் நீங்கள் தேவையற்ற இழப்புக்களைச் சந்தித்து இருப்பீர்கள். ஆனால் 2022ஆம் ஆண்டில் பொருளாதாரம் உங்களுக்கு பொறுப்பு சுமையை குறைக்க இருக்கிறது. கடந்தகால சேமிப்புகள், முதலீடுகள் போன்றவற்றால் இவ்வாண்டு அற்புத பலன்களை பெற இருக்கிறீர்கள். சுப காரியச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நவீன பொருள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் உங்களுக்கு கிடைக்க கூடிய அற்புதமான பலன்கள் மற்றவர்களை வியப்படையச் செய்யும். எதுவும் செய்யாமலேயே உங்கள் தகுதிக்கு ஏற்ப அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.

தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வாடிக்கையாளர்கள் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க இருக்கிறது. கலைப் பொருட்கள் சார்ந்த விஷயங்களில் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்கள் 2022ஆம் ஆண்டில் கவனத்துடன் இருப்பது நல்லது. இதுவரை சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டிருந்தது ஆனால் 2022ஆம் ஆண்டில் சுவாசம், நுரையீரல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

கண் தொடர்பான பிரச்சினைகளும் படை எடுக்க ஆரம்பிக்கும் எனவே ஆரோக்கிய ரீதியான விஷயங்களை கவனித்து கொள்வது நல்லது. மேலும் சிறு பிரச்சினையாக இருக்கும் பொழுதே மருத்துவ ஆலோசனை பெறுவது உத்தமம். சுவாச பிரச்சனைகள் இருப்பின் மூச்சு பயிற்சி செய்வது நல்லது.

கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் காதல் மேலும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. திருமணமாகாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நபரை திருமணம் புரிய நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

திருமணமான புதுமண தம்பதிகளுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க இருக்கிறது.

பரிகாரம்: வருமானம் அதிகரிக்க புதன் கிழமையில் புத பகவானை வழிபடுவது சிறப்பு. மேலும் உங்கள் ராசிக்கு 2022 இரண்டாம் ஆண்டு மகாலட்சுமிக்கு நெய் தீபம் போடுவது நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். மேலும் அதிர்ஷ்டம் சேர சனிக்கிழமைகளில் தாய் அல்லது தந்தையை இழந்த ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வரலாம்.

மீனம் ராசிக்காரர்களுக்கு!

குடும்பத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டு. ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். குடும்பத்தின் பொருளாதார உயர்வை முன்னிறுத்தி சில தியாகங்களை செய்ய வேண்டி வரும். பல கடினமான சந்தர்ப்பங்களை நீங்கள் எதிர்கொண்டாலும் உங்களை ஊக்குவிக்க குடும்பத்தினரின் ஆதரவு நிச்சயம் இருக்கும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் மனம் தளராமல் இருப்பது நல்லது. தேவையற்ற கோபதாபங்களை தவிர்த்து. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் உயர்வடைய விடாமுயற்ச்சி தேவை.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் சிறப்பாக அமைந்திருந்தாலும், போகப்போக அனுகூலமற்ற பலன்களை கொடுக்கும் என்பதால் உங்கள் உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டிய தருணமாக இருக்கும். தீராத உழைப்பின் மூலம் சாதிக்க வேண்டிய ஆண்டாக இவ்வாண்டு அமைய இருப்பதால் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம்.

தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். இவ்வருடம் முழுவதும் உங்களுக்கு தேவையான விஷயங்கள் கடினமான போராட்டத்திற்கு பிறகே கிடைக்கும். இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடைய பொறுமையை நீங்கள் இழக்காமல் இருப்பதால் பல்வேறு நலன்களை அடையலாம் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இடமாற்றம், பணிமாற்றம் போன்ற விஷயங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஆண்டின் நடுப்பகுதியில் புதிய விஷயங்களை செயல்படுத்துவதில் லாபம் அதிகரிக்கும். ஆண்டின் துவக்கத்தில் அதிக தொகையை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. நேர்மையான அணுகுமுறை உங்களை உயர்வடையச் செய்யும் எனவே குறுக்கு வழியை பயன்படுத்த வேண்டாம்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அலட்சியம் காண்பித்தால் தேவையற்ற வீண் விரயங்களை சந்திக்க நேரும் என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். மன உளைச்சலில் இருப்பவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

மீன ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் காதல் விவகாரத்தில் அனுகூலமற்ற பலன்கள் இருந்தாலும் படிப்படியாக நல்லதொரு முன்னேற்றம் காணலாம். கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும்.

ஆண்டின் பிற்பகுதியில் உங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். திருமணமான புதிய தம்பதிகளுக்கு குழந்தை பேரில் சாதகப் பலன்கள் உண்டு. பல வருடமாக குழந்தை இல்லாதவர்களுக்கும் இவ்வாண்டு நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமணமாகாதவர்களுக்கு சில தடைகளை தாண்டிய வெற்றியைக் காணும் யோகம் உண்டு என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. மனதிற்கு பிடித்தவர்களை பெற்றோர்களுடைய சம்மதத்துடன் திருமணம் முடிப்பீர்கள்.

பரிகாரம்: மீன ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்க இருப்பதால் வியாழக்கிழமையில் குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருவது நல்லது. சோமவார விரதம் இருப்பவர்களுக்கு தீராத பிணி எல்லாம் தீரும். நினைத்தது நடக்க உங்களால் முடிந்த அளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி புரிவது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகும்பம் ராசிக்காரர்களுக்கான புத்தாண்டு பலன்கள் எப்படி இருக்கப்போகிறது! புதிய வருடம் என்ன யோகத்தை தர இருக்கிற்து!
Next articleஇன்றைய ராசி பலன் 01.01.2022 Today Rasi Palan 01-01-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!