துலம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!

0

துலம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!

உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிரபாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் பொறுமையை கடைபிடிக்கவும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. துர்க்கை வழிபாடு, விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் – 02-01-2023 இரவு 08.50 மணி முதல் 05-01-2023 காலை 08.05 மணி வரை மற்றும் 30-01-2023 அதிகாலை 02.45 மணி முதல் 01-02-2023 பகல் 02.00 மணி வரை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிருச்சிகம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!
Next article2023 பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன? பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை!