நித்யானந்தா கைலாசா என்னும் தனி நாடு ஒன்றை அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தைகளை கடத்தி சித்ரவதை செய்வதாக நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் வர, தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், தலைமறைவாகியுள்ள நித்யானந்தா தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இதைத் தொடர்ந்து, கரீபியன் கடல் பகுதியில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதை தனி நாடாக அறிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த நாடை இந்து மதத்தின் தலைநகராக அறிப்பதோடு, தன்னையும் இந்து மதத்தின் தலைவராகவும் அறிவித்துக் கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இதற்கான சட்ட ரீதியான வேலைகளை அமெரிக்க நிறுவனம் செய்து வருவதாக கூரப்படுகிறது.
மேலும்,இதற்காக ஒரு இனையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கைலாசா நாட்டுக்காக இரு வண்ணத்திலான பாஸ்போர்ட்டுகளையும் அவர்கள் அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த நாட்டில் இந்துக்கள் அனைவரும் அல்லது இந்து மதத்தைப் பின்பற்ற நினைக்கும் எவரும் இணையலாம் என தெரிவித்துள்ளனர்.