மேஷம்
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூரத்தியையும், ஷீரடி சாய்பாபாவையும் வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
ரிஷபம்
சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
மிதுனம்
வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
கடகம்
ஞாயிற்றுக்கிழமையில் முருகனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
சிம்மம்
வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் அம்மன் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
கன்னி
புதன்கிழமை பெருமாளை வணங்க வேண்டும், குரு வழிபாடு, சித்தர்கள் வழிபாடு செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.
துலாம்
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும், குலதெய்வ வழிபாடும் மிகவும் முக்கியம்.
விருச்சிகம்
ஞாயிற்றுக்கிழமை ப்ரத்தியங்கிரா தேவியை வணங்கி அன்னதானம் செய்வது நல்லது.
தனுசு
ஞாயிற்றுக்கிழமை விநாயகரை வணங்க வேண்டும், குலதெய்வ வழிபாடும் அவசியம்.
மகரம்
செவ்வாய்கிழமை துர்க்கை வழிபாடு செய்ய வேண்டும், அன்னதானமும் செய்ய வேண்டும்.
கும்பம்
நவகிரகங்களை வாரத்தில் ஒருநாள் சென்று வணங்கி வரவேண்டும்.
மீனம்
திங்கள்கிழமை சிவனை வணங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.