திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அயப்பாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமாருக்கும், பெரம்பூரைச் சேர்ந்த உறவினர் மகளுக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் மயிலத்தில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், அயப்பாக்கத்திற்கு வந்த சிவகுமாரை கைது செய்தனர். சிறுமியை மீட்டு சென்னை கெல்லீசில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: