குனிந்து தொட முடியாத தொப்பை
பொதுவாக நாம் காணும் கருப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு நிறங்களிலுள்ள திராட்சைகளிலுமே விட்டமின் கே, சி, பி1, பி6 போன்ற நிறைய விட்டமின்கள் சத்துக்களும் மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்றனவும் அதிகளவில் காணப்படுகின்றது.
இதனைவிட திராட்சையில் அதிகளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதனால், இதன் மூலம் எமது உடல் நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன.
திராட்சையில் ஊட்டச்சத்துக்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியும் ஆனால் திராட்சையின் விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனாலேயே திராட்சையை விரும்பி சாப்பிடும் நாம் அதன் விதைகளை மட்டும் குப்பையில் தூக்கி எறிந்துவிடுட்டு உடல் எடை குறைக்க மிகவும் கஸ்ரப்படுகின்றோம்.
ஆம், உண்மையாகவே திராட்சை விதைகள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புத் தேக்கத்தைத் தடுப்பதோடு, உடலில் கொழுப்புக்களின் அளவையும் குறைக்கக் கூடியனவாக உள்ளதனால், இதனை ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது அவருக்கு தொப்பை மாயமாக மறைந்து விடுவதுடன், உடலின் ஆற்றல் மேம்படுவதுடன், உடலின் மெட்டபாலிசமும் வேகமாகும். இவ்வாறாக உடல் எடை வேகமாக குறைவடையும்.
By: Tamilpiththan