தினமும் வெறும் 10 நிமிடம் படிக்கட்டில் இப்படி செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா!

0
546

காலையில் ஆபிசுக்கு போனால் லிஃப்டுக்காக 5 நிமிடம் காத்திருக்கும் பலரை நாம் பாத்திருப்போம். எவ்வளவு கூட்டம் லிஃப்டுக்குள் இருந்தாலும் நானும் அந்த கூட்டத்தோடு கூட்டமாக லிப்ட்டில் தான் வருவேன் என அடாவடி பிடிக்கும் பலர் இங்குள்ளனர். ஆனால், இது பலவித மோசமான விளைவை தான் நமக்கு உண்டாக்கும் என்கிறது இன்றைய மருத்துவம்.

லிப்ட் கண்டுபிடித்ததே ஏதேனும் அவசர நிலையில் பயன்படுத்துவதற்கும், பல மாடிகளில் ஏறி செல்ல உதவியாக இருப்பதற்கே. ஆனால், நம்மில் பல பேர் ஒரே ஒரு மாடி படிக்கட்டு ஏற வேண்டும் என்றாலும், லிஃப்டையே நாடுவார்கள்.

உண்மையில் மாடி படிக்கட்டு ஏறி வந்தால் பல்வேறு நலன்கள் உடலுக்கு கிடைக்கும். குறிப்பாக இதய ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களுக்கு எந்தவித சுவாச கோளாறுகள் இன்றி நீண்ட நாள் உயிர் வாழலாம். இவை அனைத்தையும் பூர்த்தி செய்ய இந்த பதிவில் கூறும் ஒன்றை மட்டும் வெறும் 10 நிமிடம் செய்து வந்தால் போதும்.

ஆபத்து!
இன்றைய கால சூழல் அதிக ஆபத்து நிறைந்த சுற்றுப்புறத்தையே நமக்கு உண்டாக்கி கொண்டிருக்கிறது. இத்தகைய நிலை கால போக்கில் மனித இனத்திற்கே அழிவை உண்டாக்க கூடும். எதற்கெடுத்தாலும் உடனடி தீர்வை தேடும் நம்மில் பலரால் தான் இந்த ஆபத்தான நிலை உண்டாகியுள்ளது.

உறுப்புகள்!
உடல் உறுப்புகள் பலவற்றை இன்றளவும் பயன்படுத்தாமல் இருக்கும் நமக்கு தான் உடலில் எண்ணற்ற நோய்களின் தாக்கம் குடியேறும். இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது உள்ளுறுப்புகள் தான். குறிப்பாக இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் சொல்கின்றன.

வேலை!
வேலையே காரணமாக காட்டும் நம்மில் பலரை ஆரோக்கியமாக வைக்க ஒரு எளிமையான தீர்வு உள்ளது. அதுதான் படிக்கட்டு பயிற்சி. இதை வேலையில் இருக்கும் நேரத்திலே 10 நிமிடம் பிரேக் போன்று எடுத்து கொண்டு செய்யலாம்.

ஆராய்ச்சி!
இதயத்தை பற்றிய பல ஆய்வுகளில், இதை எவ்வாறு எளிமையாக பாதுகாப்பது என்கிற தீர்வை விஞ்ஞானிகள் ஆய்ந்தனர். அப்போது தான் அவர்களுக்கு இந்த படிக்கட்டு பயிற்சி என்கிற முறையை கண்டறிந்தனர். இந்த பயிற்சியால் உடல் எடையும் குறையும் என கூறியுள்ளனர்.

எப்படி செய்வது?
படிக்கட்டு பயிற்சி என்பது நீங்கள் நினைப்பது போன்று மிக கடினமானது கிடையாது. இதை செய்வதற்கு நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்திலோ அல்லது தங்கி இருக்கும் வீடுகளிலோ படிக்கட்டுக்குள் இருந்தால் போதும். ஜாலியாக விளையாடுவது போல நினைத்து கொண்டு படிக்கட்டில் மேலேயும் கீழேயும் ஏறி-இறங்கி, உடலை இலகு தன்மையுடன் வைத்து கொண்டு இதனை செய்து வர வேண்டும்.

எவ்வளவு?
பெரும்பாலும் இந்த பயிற்சியை 10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை செய்து வரலாம். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும். தொடர்ந்து 1 மாதம் இந்த படிக்கட்டு பயிற்சியை செய்து வந்தால் நீங்களே இதனால் ஏற்படும் மாற்றத்தை உணர்வீர்கள்.

பயன்கள்
இந்த படிக்கட்டு பயிற்சியை செய்வதன் மூலமாக உடல் உறுப்புகள் அனைத்திற்கும் சீரான அளவில் இரத்த ஓட்டம் நடைபெறும். உயர் இரத்த அழுத்தம் கொண்டோருக்கு இது நல்ல பலனை தருகிறது. இதயத்தில் ஏற்பட கூடிய நோய்களுக்கும் இது தீர்வாக அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: