திடீர் அதிர்ஷ்டம் கிடைத்து வாழ்வில் உச்சமடையும் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு உண்டு தெரியுமா! இவங்க எதை தொட்டாலும் துலங்குமாம்..!

0

சிலர் தான் ஒரு அதிர்ஷ்டசாலியான நபர் என்று நிரூபிக்க பல முறை முயன்றிருப்பார்கள். சிலர் இவர் தன்னுடன் இருந்தால் எந்த விஷயத்திலும் அதிர்ஷ்டம் தான் என நினைப்பார்கள்.

ஜோதிடத்தில் இதுபோன்று சில ராசியினர் ஒரு குறிப்பிடத்தகுந்த நபராகவும். மற்றவர்கள் விரும்பக்கூடிய அதிர்ஷ்ட நபராக இருப்பதோடு, தனே ஒரு அதிர்ஷ்டசாலியான நபராக இருப்பார்கள்.

இவர்கள் பிறந்தது மிகவும் ஏழ்மையான சூழல், படித்து வேலை தேடும் வரை ஏழ்மை நிலை போன்று இருந்தாலும் அவருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பெரியளவில் நிதி நிலைமை முன்னேற்றம் அடைதல், தொழில் பெருகுதல், பெரிய உத்தியோகம் அடைதல், அதிர்ஷ நிகழ்வுகள் நடத்தல் என பல விஷயங்கள் சிறப்பாக நடந்தேறும். அப்படி அதிர்ஷ்டசாலியான ராசியினர் யார் என்பதை இங்கு பார்ப்போம்.

கடகம்

கடக ராசியினர் மற்ற ராசியினரை விட அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். மற்றவர்கள் இவர்களை அதிகம் கவனிப்பார்கள். மற்றவர்களுக்கும் அதிர்ஷ்டமான நபராக கருதப்படுகிறார்கள். இயல்பாக இவர்கள் மென்மையான நபராக கருதப்படுகிறது. அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் மற்றவர்கள் இவர்களின் உணர்வுகளை மதிப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியினர் மற்றவர்களுக்கு தான் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதை பல சமயங்களில் நிரூபிப்பார்கள். நம்பிக்கையோடு உழைக்கும் நபர்களுக்கு அதிர்ஷ்டம் கூடவே இருப்பதால் எந்த் செயல், தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

ஒவ்வொரு உறவையும் மிகவும் நேர்மையுடன் கையாள்வார்கள். இவர்களுக்குள் இருக்கும் ஆற்றல் மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரும் திறனைக் கொண்டுள்ளது.

​​தனுசு

தனுசு ராசியினர் அதிர்ஷ்டசாலியான நபர்கள். இவர்களின் பேச்சு, செயல் மற்றவர்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கும். இவர்களுக்கு பலர் உதவ முன் வருவர்.

இதனால் இவர்களின் பணி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை மூலமும் நல்ல அதிர்ஷ்டங்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது.

கும்பம்
கும்ப ராசியினர் வெற்றியைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும். இவர்கள் தங்களுக்கு தானே அதிர்ஷ்டசாலியாக இருப்பதை விட மற்றவர்களுக்கு அதிர்ஷ்டசாலியான நபராக இருப்பார்கள். பல நபர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொண்டு வேகமாக முன்னேறிச் செல்வதையும், இவர்கள் பின் தங்கியிருப்பதையும் காணலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 28.09.2021 Today Rasi Palan 28-09-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 29.09.2021 Today Rasi Palan 29-09-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!