தாலி கட்டிய மறுநிமிடமே தற்கொலை! பூஜை அறையில் மயங்கி கிடந்த இளம்ஜோடி!

0
390

கும்பகோணத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி, தாலி கட்டியதும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ரவீந்திரன் என்பவரின் மகன் சுரேஷ் (23). இளங்கலை பட்டதாரியான சுரேசும், பொறியியல் பட்டதாரியான சரண்யாவும் (23) கடந்த 7 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் உறவினர்களாக இருந்தாலும் கூட, வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேசமயம் இளம்ஜோடி தங்கள் காதலிலும் உறுதியாக இருந்துள்ளனர்.


இந்த நிலையில் கடந்த 29ம் திகதியன்று வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து ரமேஷ் வீட்டிற்கு சரண்யா சென்றுள்ளார். அங்கிருந்த பூஜை அறையில் வைத்து, சரண்யா கழுத்தில் ரமேஷ் தாலி காட்டியுள்ளார்.

எப்படியும் இரு வீட்டாரும் சேர விடமாட்டார்கள் என்பதால் எலிமருந்தை சாப்பிட்டு பூஜை அறையிலேயே மயங்கி கிடந்துள்ளனர்.

வெளியில் சென்றிருந்த ரமேஷ் பெற்றோர் சிறிது நேரத்திலே வீடு திரும்பியுள்ளனர். அப்பொழுது கழுத்தில் புதிய தாலியுடன், ரமேஷ் மற்றும் சரண்யா பூஜை அறையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த இருவரும் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும்! இத குடிங்க காலை நிச்சயம் இந்த அதிசயம் நடக்கும்!
Next articleஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்!