ஐஸ்கட்டியை நாள்தோறும் 2 நிமிடம் இப்படி பயன்படுத்திப்பாருங்கள் தீராத தலைவலி மற்றும் முகப்பரு என்பன ஓடிவிடும் !

0

ஐஸ்கட்டியை நாள்தோறும் 2 நிமிடம் இப்படி பயன்படுத்திப்பாருங்கள்

தூசி, மாசுக்கள், அலைச்சல் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றினால் பொலிவிழக்கும் முகம் மற்றும் சருமத்தின் சோர்வுகளை நீக்குவதுடன், தினமும் ஐஸ்கட்டிகளை கொண்டு 2 நிமிடம் நெற்றியில் வைத்து மசாஜ் செய்து வரும் போது தீராத தலைவலி கூட விரைவாக குணமடையும்.

ஒற்றை தலைவலி குணமாக

எப்போதெல்லாம் தலைவலி இருப்பது போல நீங்கள் உணரும் வேளைகளில் ஐஸ் கட்டிகளை கழுத்து மற்றும் நெற்றிப் பகுதிகளில் சில நிமிடங்கள் வரை வைத்து அழுத்திப் பிடித் மசாஜ் செய்வதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெற்று தலைவலியை குறைக்கின்றன.

ஐஸ்கட்டியை கொண்டு மசாஜ் செய்தால் கிடைக்கும் பயன்கள்

முகப்பருவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் 15 நிமிடங்கள் ஐஸ்கட்டியை கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தில் உள்ள எண்ணைப்பசை நீங்கி, சருமம் மிருதுவாகிறது. இவ்வாறாக முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மறைந்த பின்னரும், மாறாதுள்ள அதன் தழும்புகளில் தினமும் 15 நிமிடங்கள் ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் தரும் போது, தழும்புகள் மறையும். இவ்வாறாக தொடர்சியாக ஐஸ்கட்டிகளை சருமத்தில் அழுத்துதல் மற்றும் தேய்த்தல் மூலம் சருமத்தின் துளைகளை முழுமையாக அகற்ற முடியும்.

வெயிலினால் சோர்வாக, கலை இழந்து காணப்படும் முகத்தில் ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து வரும் போது, முகத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு முகம் பளிச்சென்று தெரிவதுடன், முகத்தில் உள்ள தடிப்புகள் எரிச்சலை உண்டாக்கி முகம் சிவந்து காணப்படும் போது முகத்தில் ஐஸ்கட்டியை கொண்டு அழுத்தி எடுத்தல் மற்றும் முகத்தில் எண்ணெய் வடிதல் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஐஸ்கட்டியால் மசாஜ் செய்வது நல்ல பலனை தரும். மேலும், கண்களை அழகாக்குவதற்கு, ஒர சிறிய காட்டன் துணியில் ஐஸ்கட்டியை வைத்து, தினமும் காலையில் கண்களை சுற்றி மசாஜ் செய்தல் வேண்டும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த‌‌ மாதத்தில் பிறந்தவர்கள் இந்த‌ மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்ம்!
Next articleஉங்களுக்கு குதிகால் வலி வருவதற்கு என்ன காரணம்? தடுக்க என்ன செய்யலாம்!