தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கப்போகும் அதிஸ்டம் என்ன! எந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபகமான சூழல் அமையப்போகிறது!

0

தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கப்போகும் அதிஸ்டம் என்ன! எந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபகமான சூழல் அமையப்போகிறது!

மேஷம் ராசிகாரர்களுக்கு : ராசிக்கு 9ஆவது வீடான பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். அப்பா வழியில் உதவி கிடைக்கும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது.

ரிஷபம் ராசிகாரர்களுக்கு : பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம்.

மிதுனம் ராசிகாரர்களுக்கு : சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்வதால் சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும்.

கடகம் ராசிகாரர்களுக்கு : பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும்.

சிம்மம் ராசிகாரர்களுக்கு : சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளார். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண்டிகை காலம் என்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

கன்னி ராசிகாரர்களுக்கு : சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து பயணம் செய்வதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.

துலாம் ராசிகாரர்களுக்கு : சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள்.

விருச்சிகம் ராசிகாரர்களுக்கு : சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்.

தனுசு ராசிகாரர்களுக்கு : சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

மகரம் ராசிகாரர்களுக்கு : 12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்கிறார். சுப விரைய செலவு ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள்.

கும்பம் ராசிகாரர்களுக்கு : சுக்கிரன் 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது.

மீனம் ராசிகாரர்களுக்கு : 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் உங்கள் வேலையில், தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பத்தில் சுக்கிரன் பதவி யோகத்தையும் பதவியில் உயர்வையும் தருவார். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் குருறும் சனியால் ஏற்பட போகும் அதிரடி மாற்றம் எந்த‌ ராசிக்கு விபரீத ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா! இந்த 3 ராசியும் படியுங்க!
Next articleசுக்கிர பகவானுக்கு பிடித்தமானவைகள்! சுக்கிர பகவானுக்கு உகந்த குணாதிசயங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்!