தனுசு ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!

0

தனுசு ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஜென்ம ராசி மற்றும் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் குரு 4-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருக்கவும். தொழில், வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 07-01-2023 இரவு 08.23 மணி முதல் 10-01-2023 காலை 09.00 மணி வரை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமகரம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!
Next articleவிருச்சிகம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!