கெட்ட காலம் என்று ஒன்று இருந்தால் நல்ல காலம் என்று வரத்தானேசெய்யும். தனுசு ராசிக்காரர்களுக்கு அப்படித்தான். ஏழரை சனியால் எழுந்திருக்க முடியாமல்சோக கீதம் பாடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு சந்தோஷ சம்பவங்கள் நடைபெறப்போகிறது. உங்கபாசிட்டிவ் எனர்ஜி 2020ஆம் புத்தாண்டில் அதிகரிக்கப் போகிறது. இந்த ஆண்டாவது திருமணம்முடியுமா, இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்தபுத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு வெற்றிகள்தேடி வரப்போகிறது மகிழ்ச்சி வந்து மனதை வருடிக்கொடுக்கப் போகிறது. ராஜயோகம் தரக்கூடியஆண்டாக 2020ஆம் ஆண்டு அமைந்துள்ளது.
2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில்ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி,புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அருமையான யோக பலன்களையும் நன்மைகளையும் தரப்போகிறது.2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமானஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு சனி திருக்கணிதப்படி இடப்பெயர்ச்சிஅடைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு என்ன நன்மைகள் நடக்கும் என்றுபார்க்கலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு உங்க ராசிநாதன் குரு உங்க ராசியில்அமர்ந்திருப்பது அற்புதமான காலகட்டம். குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சிறந்தஆன்மீக வாதிகள். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் நீங்கள். எதையும் வெளிப்படையாகபேசுவீர்கள். உங்களில் பலரும் ஜென்ம சனியால் அவதிப்பட்டு வருகிறீர்கள். பட்ஜெட் போட்டுவாழ்க்கை நடத்தும் உங்களுக்கு 2020ஆம் புத்தாண்டு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது.
சோதனைகள் சாதனைகளாகும்
ஏழரை சனி காலத்தில் அதுவும் ஜென்ம சனியில் வாழ்வதே பெறும் போராட்டமாகஇருக்கிறது. எப்படா இந்த பிரச்சினை முடியும் என்று யோசிக்கிறீர்கள். கடவுள் கண் திறக்கப்போகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே சறுக்கல்களை மட்டுமே சந்தித்து வருகிறீர்கள். வேலைஇல்லையே என்று கவலைப்பட்ட உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வயதானவர்களுக்குகூட ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
திருமண யோகம்
தொழிலில் செய்த முதலீடுகள் எல்லாம் நஷ்டத்திற்கு தள்ளிவிட்டது.தசாபுத்தி சரியில்லாவிட்டால் கடனும் நோய்களும் வாட்டி வதக்கின. இனி இந்த பிரச்சினைகள்முடிவுக்கு வரப்போகிறது. உங்க ராசிநாதன் குருபகவான் உங்க ராசியில் இருக்கிறார். ஏழரைசனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. ஜென்ம குரு உங்க ராசிக்கு ஐந்து,ஏழு, ஒன்பதாம்இடங்களை பார்வையிடுவதால் திருமண பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையும். திருமண யோகமும்,புத்திர பாக்கியமும் கைகூடி வரப்போகிறது.
கவுரவம் தேடி வரும்
உங்க ராசியில் கேது உடன் குரு சேர்ந்திருப்பது சிறப்பு. தெய்வீகஅருளும், கோடீஸ்வர யோகத்தையும் தரப்போகிறார். தடைகள் விலகும். சர்ப்ப தோஷத்தினால் ஏற்பட்டபிரச்சினைகள் தீரும் சந்தோஷங்கள் அதிகமாகப்போகிறது. தன்னம்பிக்கையோடு இந்த உலகத்தை எதிர்நோக்குவீர்கள். அதிர்ஷ்டங்கள் தேடி வரும். வெற்றி வாய்ப்புகள் உங்களை நாடி வரும்.கவுரவம் செல்வாக்கு தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.ஆசிரியர்கள்,மீடியா துறையில் இருப்பவர்களுக்கு யோகமான ஆண்டு. செய் தொழில் வணிகத்தில் லாபம் கிடைக்கும்.தன லாபம் கிடைக்கப் போகிறது என்றாலும் செலவுகளும் கூடி வரும்.
எதிர்காலம் அற்புதம்
தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குருபகவான் அற்புதபலன்களை தரப்போகிறார். ராஜயோகத்தை தரப்போகிறார். குருவின் பார்வையால் சந்தோஷங்கள் அதிகம்நடக்கும். நோய்கள் நீங்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வளமான எதிர்காலத்தை தரப்போகிறவரப்பிரசாதமான ஆண்டாக அமையப்போகிறது. ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள் இதனால் ஆண்டு முழுவதும்பல அற்புதங்கள் நிகழப்போகிறது.
நெருக்கடிகள் தீரும்
நீங்க பட்ட கஷ்டங்களுக்கு பலன்கள் கிடைக்கப்போகிறது. மாணவர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையும். நோயில் கஷ்டப்பட்டவர்களுக்கு தீர்வுகள் வரும். கடன்கள் தீரும்.நெருக்கடிகள் முடிவுக்கு வரும். புதிய வேலைகள் கிடைக்கும். எத்தனையோ பேர் நேர்முகத்தேர்வுக்குவந்தாலும் 2020ஆம் ஆண்டில் வெற்றி தேவதை உங்களைப் பார்த்து புன்னகைப்பாள். அதற்குக்காரணம் உங்களுக்கு இருக்கும் நேர்மறையான எண்ணங்களால்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஆண்டு இறுதி வரை குரு பகவான் உங்க ராசியில்இருப்பதால் வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.