தனுசுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு! ஏழரை சனி முடிவுக்கு வருகிறது! கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளுக்கு என்ன நன்மை கிடைக்கும்!
இந்த வருட இறுதியில் இருந்தே நல்ல காலம் பிறந்து விட்டது. யாருக்கு என்னென்ன யோகம் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
கடகம்
குரு உடன் சந்திரன் இணைந்து குரு சந்திர யோகத்தையும் தருவார். நிறைய பணம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். சுபசெலவுகளாக மாற்றுங்கள்.
உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை.
சிம்மம்
குருவின் பார்வையால் நிறைய சாதகங்கள் கிடைக்கும். செவ்வாய் நான்காம் வீட்டிற்கு சென்று சூரியன் உடன் இணைவதால் சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு, மனை வாங்கலாம். வேலையில் பளு அதிகரிக்கும் நிதானத்தை கடைபிடிக்கவும்.
சுக்கிரன் ஆறாம் வீட்டிற்கு சென்று சனியோடு இணைவதால் வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு பதவிகள் தேடி வரும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
கன்னி
திடீர் கௌரவ பதவிகள் தேடி வரும். வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நல்ல வேலை கிடைக்கும். திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். குழந்தை பாக்கியம் கை கூடி வரும்.
புதிய யோசனைகள் மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கை கூடி வரும். சகோதரர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் தொந்தரவு அதிகரிக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம்
ராசியில் உள்ள செவ்வாய் சூரியன் புதனோடு இணைகிறார். திருமண சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். புத்திரபாக்கியம் கை கூடி வரும் பயணங்களால் நன்மை உண்டாகும்.
விருச்சிகம்
நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். காதல் விவகாரங்கள் கை கூடி வரும்.கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கலாம். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். வேலையில் இடமாற்றம் வீட்டில் இடமாற்றம் உண்டாகும். மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டில் சூரியன், புதன் இணைந்து பயணிக்கும் போது உயர்கல்வி யோகம் வரும். தடைகள் நீங்கி புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
தனுசு
தனுசுக்கு ஏழமை சனி முடியும் காலம். செவ்வாய் 12ஆம் வீட்டிற்கு வந்து சூரியன் கேது உடன் இணைந்து விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறார். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். திருமண சுப காரியங்களுக்கு முயற்சி செய்யலாம்.
தம்பதியர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு சொத்து சேர்க்கை ஏற்படும்.