கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்! பொருளாதார நிலை உயர்வடையும்!

0
2909

இந்து மத வழிபாட்டில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் என்றால் அது கற்பூரம்தான். ஏனெனில் அனைத்து கடவுள்களுக்கும் கற்பூர ஆரத்தி என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். கற்பூரம் நமக்கு வேறுவகையிலும் உதவக்கூடும். கற்பூரம் ஒரு சிறந்த பாக்டீரிய எதிர்ப்பு பொருளாகும் மேலும் இது உங்கள் சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்தும்.

மருத்துவ பலன்கள் மட்டுமின்றி இது உங்களின் பொருளாதார நிலையையும் உயர்த்த உதவும். கற்பூரத்தை சரியாக பயன்படுத்தினால் அது உங்கள் வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும் அதிகரிக்கும். இந்த பதிவில் கற்பூரம் எப்படி உங்கள் வாழ்வில் செல்வத்தை சேர்க்கும் ஏன்னு பார்க்கலாம்.

தூங்கும் போது கற்பூரத்துடன் சில கிராம்பை சேர்த்து கொளுத்தவும். இதனை தினமும் சில வாரங்களுக்கு தொடர்ந்து செய்யவும். இது உங்களை செல்வந்தராக மட்டும் மாற்றுவதில்லை, மேலும் இது உங்கள் அனைத்து வேலைகளையும் எளிதில் முடியும்படி செய்கிறது.

சனிக்கிழமைகளில் தண்ணீரில் சிறிது கற்பூர எண்ணெயை சேர்த்து அதில் குளிக்கவும், இதனை தொடர்ந்து செய்யவும். இது உங்கள் விதியை மாற்றி ஒளிர செய்வதுடன் பல நோய்களில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கற்பூரம் ஏற்றி அனுமன் மந்திரத்தை கூறி அவரை வழிபடவும். இது உங்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

உங்களின் எந்த வேலையும் சரியாக நடக்கவில்லை என்றால் அதற்கு காரணம் வாஸ்து தோஷமாக கூட இருக்கலாம். உங்கள் வீட்டில் எப்போதும் இரண்டு கற்பூர பந்துகளை வைத்திருங்கள், அது சுருங்கியவுடன் புதிய கற்பூரத்தை வையுங்கள். இது உங்களின் வாஸ்து தோஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும்.

நீங்கள் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டாலோ அல்லது அனைத்து வேலைகளிலும் தடை ஏற்பட்டாலோ, தினமும் காலை மற்றும் மாலையில் கற்பூரத்தை நெய்யில் மூழ்க வைத்து எடுத்து கொளுத்தி வழிபடவும். இது உங்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும்

உங்கள் திருமணத்தில் தொடர்ந்து ஏதாவது தடைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால் 6 கற்பூரம் மற்றும் 36 கிராம்பு இதனுடன் அரிசி மற்றும் மஞ்சளை சேர்க்கவும். இந்த கலவையை துர்கை அம்மனுக்கு வைத்து வழிபடவும். இவ்வாறு செய்தால் உங்கள் திருமணத்தில் இருக்கும் அனைத்து தடைகளும் நீங்கும். கற்பூரத்தின் மருத்துவ பலன்கள் என்னென்று என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

கற்பூரம் உங்கள் சருமத்தில் ஏற்படும் அரிப்பை நீக்கி உங்கள் சருமத்தை குளிச்சியாக வைத்திருக்க உதவும். எனவே இனிமேல் உங்கள் சருமத்தில் அரிப்பு ஏற்பாட்டால் கற்பூரத்தை அங்கு வைத்து நன்கு தேய்க்கவும்.

கற்பூரத்தை சிறந்த வலி நிவாரணியாக செயல்படும், இதை உங்கள் சருமத்தின் மீது நேரடியாக தேய்க்கலாம். உங்கள் உடனடியாக வலியை குறைப்பதுடன் உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.

சிறிய தீக்காயங்களுக்கு கற்பூரம் நல்ல தீர்வை வழங்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் காயப்பட்ட இடத்தின் மீது சிறிது கற்பூர எண்ணெயை தேய்த்து சில நிமிடங்க அப்படியே விட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்வது தீக்காயம் விரைவில் குணமடைய உதவும்.

கற்பூரம் உங்கள் பருக்களை எளிதில் குணப்படுத்தும், பருக்களின் சிவப்பு நிறம் மற்றும் வீக்கத்தை இது குறைக்கக்கூடும். படுக்கைக்கு செல்வதற்கு முன் பருக்களின் மீது சிறிது கற்பூரத்தை தேய்த்து விட்டு படுக்கைக்கு செல்லவும். இவ்வாறு செய்வது பருக்களை விரைவில் மறைய வைக்கும்.

கற்பூரம் இருக்கும் க்ரீம்கள் உங்கள் வெடிப்பு ஏற்பட்ட பாதங்களின் மீது அற்புதங்களை ஏற்படுத்தக்கூடும். பாதவெடிப்பின் மீது இந்த க்ரீமை தடவி அதன் மீது காலுறையை போட்டு அரைமணி நேரம் அப்படியே இருக்கவும். விரைவிலேயே உங்கள் பாதம் மென்மையானதாக மாறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகர் சூர்யா மோசமான நபர்! அவர் டைம் ஓவர்! கடுமையாக விமர்சித்த பிரபல சீரியல் நடிகர்!
Next articleபிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலா ப்ரேமம் நடிகை! இணையத்தில் வைரலாகும் செய்தி!