தங்க கழிப்பறையை இழக்கும் விஜய் மல்லையா: ஏன் தெரியுமா?

0

லண்டனில் தங்க கழிப்பறை வசதியுடன் இருக்கும் சொகுசு வீட்டை இழக்கும் நிலைக்கு விஜய் மல்லையா தள்ளப்பட்டுள்ளார்.

தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடனை பெற்ற நிலையில் அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார்.

இதையடுத்து லண்டனில் இருந்து மல்லையாவை நாடு கடத்த இந்தியா திட்டமிட்டது.

இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு வருவதை தவிர்க்க சிறைச்சாலைகள் குறித்து நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன்பின்னர் மும்பையில் உள்ள சிறை சாலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்தினால் சிறை வைப்பதற்கான அறையை வீடியோவாக எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது

இந்நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் லண்டனில் இருக்கும் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ 185 கோடி கடனாக பெற்றார் விஜய் மல்லையா. இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்துவதாக ஒப்புக் கொண்டார்.

மல்லையா சொன்ன 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அதன்பின்னரும், தான் திருப்பிச் செலுத்துவதாக கூறிய 185 கோடி ரூபாயை அவர் செலுத்த தவறிவிட்டார்.

இதையடுத்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் சுவிஸ் வங்கி வழக்கு தொடர்ந்தது. அதன்படி லண்டன் வீட்டிலிருந்து மல்லையா குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு அந்த வீட்டை தங்கள் வசம் ஒப்படைக்க சுவிஸ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த வழக்கில் அடுத்த ஆண்டு மே 7-ஆம் திகதி நடைபெறவுள்ளது. எனவே வழக்கின் தீர்ப்பு மல்லையாவுக்கு எதிராகத் தான் வரும் என்று தெரிகிறது.

லண்டனில் பங்களாவில் கோடிகளில் செய்யப்பட்ட தங்கத்திலான கழிப்பறை உள்ளது.

இத்தகைய சொகுசு பங்களா மல்லையாவின் கையை விட்டு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏற்கனவே மல்லையாவின் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 26.11.2018 திங்கட்கிழமை !
Next articleதொண்டை கரகரப்பு, சளித்தொல்லை, ஜலதோசம் என்பவற்றிற்கு தீர்வு தரும் மணத்தக்காளி!