டோனி விளையாட மாட்டார்! அவருக்கு ஓய்வு… வெளியான தகவல் !

0

அடுத்தமாதம் நடைபெற்றவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் டோனிக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையுறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், டோனி தனது ஓய்வை அறிவிக்கலாம் என்ற செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் டோனி இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை எனவும், அவரது வார்த்தைக்காக தான் காத்துக்கொண்டிருக்கிறோம் எனவும் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் அடுத்த மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது.

அங்கு செல்லும் இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதற்கான அணி தேர்வு, வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மும்பையில் நடக்கவுள்ளது. இதில் டோனிக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோஹ்லி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட உள்ளது.

மேலும் இந்த தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபோதைப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கா நோக்கிவந்த ஐ.எஸ் அமைப்பின் கப்பல்கள்; கைப்பற்றிய கடற்படை!
Next articleகண் பார்வை தெளிவாக !