டிக் டாக் பெண் கொலை விவகாரத்தில் கணவனின் வாக்குமூலம்! அவள் என்னிடம் அப்படி சென்னால்! கொலை செய்தேன்!

0
402

தமிழகத்தில் டிக் டாக் ஆப்பில் தொடர்ந்து வீடியோ பதிவேற்றம் செய்து வந்த மனைவியை கணவன் கொலை செய்த நிலையில், ஏன் அவரை கொலை செய்தேன் என்று கணவன் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு நந்தினி (28) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

டிக் டாக்கின் மீது மோகம் கொண்ட நந்தினி தொடர்ந்து அந்த ஆப்பில் வீடியோ பதிவேற்றம் செய்து வந்ததால், ஆத்திரத்தில் கனகராஜ் அவரை கொலை செய்துவிட்டதாக செய்தி வெளியானது.

இதனால் கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், நந்தினி போனில் அதிகமாகப் பேசி வந்ததைக் கண்டித்ததால் எங்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நந்தினி தனது டப்ஸ்மாஸ் விடியோக்களை அவ்வப்போது இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்தார். இது எனக்குப் பிடிக்கவில்லை.

இதனால் நாங்கள் பிரிந்து வாழ்ந்தோம். குழந்தைகளுக்காக மீண்டும் சேர்ந்து வாழச் சொல்லி உறவினர்கள் அறிவுறுத்தியால் சேர்ந்து வசித்தோம்.

ஆனால் நந்தினி எப்போதும் போனில் விடியோ பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை அன்று நந்தினியை நான் போனில் தொடர்புகொண்டபோது 1 மணி நேரத்துக்கும் மேலாக யாருடனோ இடைவெளியில்லாமல் பேசிக் கொண்டே இருந்தார்.

இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர் பணிபுரியும் கல்லூரிக்கு நேரில் சென்று கேட்டபோது, நான் யாருடன் வேண்டுமானாலும் பேசுவேன், எப்படியும் இருப்பேன். அது என் இஷ்டம். நீ கேட்கக் கூடாது என என்னைத் திட்டினார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் என் மனைவியைக் குத்திவிட்டுத் தப்ப முயன்றேன். அங்கிருந்தவர்கள் என்னைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து பொலிசார் கனகராஜை நீதித்துறை நடுவர் மன்றம் எண்- 7 இல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையின் ஒரு பகுதியில் ஏற்படவுள்ள ஆபத்து! 3233 குடும்பங்களுக்கு எச்சரிக்கை!
Next articleபயன்படுத்திய மொபைலை விற்ற இளைஞர்! இருவரின் உயிரைப் பறித்த ஒற்றைப் புகைப்படம்!