ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை சனி வக்ர பெயர்ச்சியாவதால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்கள்
ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை சனிபகவான் வக்கிரமாக செல்வதனால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
கவனமாகச் சிந்தித்து செயல்படுதல் வேண்டும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டுப் பின் இனிதே நடந்தேறும்.
ரிஷபம்
வேலையில் நெருக்கடி நிலை ஏற்படும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. நேரத்திற்கு உணவு அருந்துதல் நலம் கூடியவரை விரதத்தைத் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. முதலாளி தொழிலாளி உறவு சுமுகமாக இருக்காது. மேலும் தகப்பனாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபடவும்.
கடகம்
சனி வக்ரம் அடைவதால் தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும். கணவன் – மனைவி இடையே பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். கடன் பிரச்னை தீரும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சிம்மம்
சனிபகவான் கண்டச்சனியாக அமர்ந்து கவலைக்கு ஆளாக்கி வருகிறார். உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். பொறுப்பும் குடும்ப பாரமும் தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும்.
கன்னி
சனியின் வக்ர சஞ்சாரத்தினால் அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் தேவையற்ற மன உளைச்சல்கள் அதிகரிக்கும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும்.
துலாம்
கையில் தாரளமாக பணப்புழக்கம் இருந்து வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும்.
விருச்சிகம்
சனி தற்போது அர்த்தாஷ்டம சனியாக இருந்து வக்ர கதியில் செல்கிறார். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். பாதிப்புகள் குறைய ஆஞ்சனேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
தனுசு
ஏழரை சனி ஆட்டிப்படைத்தது. சனிபகவான் வக்ர சஞ்சாரத்தினால் தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற கடன் வாங்குதல் கூடாது. புது முயற்சிகளில் அதிக கவனமுடன் இருக்கவும்.
மகரம்
சனி பகவான் பின்னோக்கி செல்லும் போது எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்க சந்தர்ப்பம் அமையும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும்.
கும்பம்
சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபம் கிட்டும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மீனம்
சனி உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். இனி பின்னோக்கிச் செல்வதால் இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். செலவுகள் அதிகரிக்கும்.