ஜனாதிபதி நிதியமைச்சை விட்டு வெளியேறவேண்டும்: பிரியங்க துனுசிங்க கோரிக்கை!

0

ஜனாதிபதி நிதியமைச்சை விட்டு வெளியேறவேண்டும்: பிரியங்க துனுசிங்க கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு முழுநேர நிதி அமைச்சர் தேவை என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சை வேறொரு அமைச்சருக்கு வழங்க வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கீழ் நிதி அமைச்சு இருப்பது தற்போது சரியான தீர்வல்ல. சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலை விரைவாக முடிக்க வேண்டும்.

உலக வங்கி விடுத்துள்ள அரசியல் திருத்தம் உள்ளிட்ட நிபந்தனைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது தற்போதைய நிலையில் கட்டாயமாகும்.

தற்போதுள்ள அரசாங்கமோ அல்லது புதிய அரசாங்கமோ இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க முடியாது.

நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் பொருளாதார நெருக்கடியை இரண்டு வருடங்களுக்குள் திட்டமிட்டுத் தீர்க்க முடியும் என சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 07.08.2022 Today Rasi Palan 07-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleபாடசாலைகள் நடத்தும் நாட்களில் கல்வி அமைச்சு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது!