சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து கெத்து காட்டிய தமிழன்!

0

பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் காவிரி மேலாண்மை வேண்டும் என்ற கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தது தற்போது வைரலாகி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழகமும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் போட்டி என்றாலே, நிரம்பி காணப்படும் சென்னை சேப்பாக்கம் மைதானம், தற்போது ஆங்காங்கே காலியாகவே காட்சி அளிக்கின்றது.

மட்டுமின்றி இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு இல்லாத அளவு வரலாறு காணாத பாதுகாப்பு சென்னை போட்டிக்கு போடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பாதுகாப்புகளை மீறி சென்னை சேப்பாக்க மைதானத்துக்குள் சென்னை ரசிகர் ஒருவர் காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என எழுதப்பட்டிருந்த கருப்பு பேட்ஜை அணிந்திருந்தார்.

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article20 வருடமாக பல் விலக்காத மனிதர்: இப்போ என்ன ஆனார் தெரியுமா?
Next articleவீட்டு வாடகைக்காக 8 வயது சிறுவன் படுகொலை: நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!