செவ்வாய் கிழமைகளில் செய்யக்கூடாது தவறுகள்! மீறிச்செய்தால் இப்படியான துன்பங்கள் ஏற்படும்! ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றலின் கிரகமாக கருதப்படுகிறது. இந்த செவ்வாய் கிழமையில் ஒருசில செயல்களை செய்யக்கூடாது.
அவ்வாறு செய்வதால் செவ்வாய் பகவானின் கோபத்திற்கு ஆளாகி, வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது செவ்வாய்கிழமைகளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
செவ்வாய் கிழமைகளில் இந்த தவறை செய்திடாதீங்க! அடுத்தடுத்து கஷ்டம் ஏற்படுமாம்
நீங்கள் அசைவ உணவுப் பிரியராக இருந்தாலோ அல்லது அசைவ உணவை அவ்வப்போது உண்பவராக இருந்தாலோ, செவ்வாய்கிழமைகளில் மட்டும் அசைவ உணவை உண்ணாதீர்கள். இல்லாவிட்டால், வாழ்வில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அனுமன் மண்ணின் மைந்தனாக கருதப்படுகிறார். ஆகவே செவ்வாய்கிழமைகளில் புதிய வீடு வாங்கவோ அல்லது புதிய வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்யவோ கூடாது. அவ்வாற செய்தால் வீட்டில் பல நோய்கள் வரவும், குடும்பத்தில் பண பிரச்சனை ஏற்படத் தொடங்கும்.
செவ்வாய் கிழமைகளில் இரும்பு பொருட்கள், கருப்பு நிற ஆடைகள் வாங்குவதை தவிர்க்கவும். ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற ஆடைகளை வாங்கி அணியலாம். சிவப்பு நிற ஆடைகளை அணிவது செவ்வாய் தோஷத்தைக் குறைக்கும்.
செவ்வாய்கிழமைகளில் மேக்கப் பொருட்கள் அல்லது கண்ணாடி பொருட்களை வாங்காதீர்கள். இல்லாவிட்டால் கணவன்-மனைவி இடையே சண்டைகள் வரத் தொடங்குவதுடன், வீட்டில் பண இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
செவ்வாய்கிழமை அன்று தாமிரம், குங்குமம், கோதுமை, செம்பருத்தி, தேன், மிளகாய் ஆகியவற்றை தானம் செய்வது நல்லது. அதோடு சிவப்பு நிற பழங்கள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளையும் தானமாக வழங்கலாம். இவ்வாறு செய்வதால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.