சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்!
ரிஷபம்
சூரிய சுக்கிர சேர்க்கையால் ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் உடன்பணிபுரிபவர்களுடன் நல்லுறவை உருவாக்குவார்கள். அவர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். எனவே இக்காலத்தை உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகவும், சற்று வேடிக்கை நிறைந்தும் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியன் சுக்கிரனுடன் இணைவதால் சிம்ம ராசிக்காரர்கள் இக்காலத்தில் அனைவராலும் பாராட்டப்படுவார்கள். மாணவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் சூரியனுடன் இணைவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். இக்காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும், எதிர்மறை விஷயங்களில் இருந்து சற்றி விலகி இருக்க முயலுங்கள். டிசைனிங் துறையில் இருப்பவர்கள், இக்காலத்தில் தங்களின் புதிய யோசனையால் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.