சுருண்டது இலங்கை! திடீரென மைதானத்தில் குப்புறப்படுத்த வீரர்கள், நடுவர்கள்! வைரலாகும் வீடியோ!

0
562

உலகக் கோப்பை தொடரில் இலங்கை-தென் ஆப்பிரிக்கா போட்டியின் போது திடீரென மைதானத்திற்குள் தேனீக்கள் புகுந்ததால், வீரர்கள், நடுவர்கள் குப்புறப்படுத்தனர்.

எமிரேட்ஸ் ரிவர்சைடு, செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் இலங்கை-தென் ஆப்பிரிக்கா போட்டி நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் பெர்னாண்டோ, குசல் பெரேரா அதிகபட்சமாக 30 ஓட்டங்கள் எடுத்தனர்.

போட்டியின் போது திடீரென மைதானத்திற்குள் தேனீக்கள் புகுந்ததால், வீரர்கள், நடுவர்கள் குப்புறப்படுத்தனர். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரிஸ், டுவைன் பிரிட்டோரியஸ் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி துடுப்பாடி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: