சீரற்ற காலநிலை பற்றி விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

0

சீரற்ற காலநிலை பற்றி விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு அவசர அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

காலநிலை காரணமாக அனர்த்தங்கள் நிகழுமாயின் உடனடியாக 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாடசாலைகள் நடத்தும் நாட்களில் கல்வி அமைச்சு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது!
Next article50 சதவீதத்தால் அதிகரிக்க உள்ள பொருட்களின் விலைகள்! வெளியாகியுள்ள காரணம்!