சிறுநீரை வாயால் உறிஞ்சி பயணியை காப்பாற்றிய மருத்துவர் !நடுவானில் விமானத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ !

0

சீனாவில் பயணிகள் விமானத்தில் சக பயணியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர் அவரின் சிறுநீரை உறிஞ்சி வெளியில் எடுத்து காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

சீனாவில் சவுத்தர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று Guangzhou-வில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு கடந்த 19-ஆம் திகதி புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தூங்கி கொண்டிருந்தன. அப்போது விமான நியூயார்க்கை அடைவதற்கு 6 மணி நேரம் இருந்தது.

அப்போது விமானத்தின் தலைமை விமான ஊழியர், ஒரு மூத்த பயணி சிறுநீர் கழிக்க முடியாமல் வெகு நேரமாக அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் கடுமையான வலிகளை சந்தித்து வருகிறார், விமானத்தில் மருத்துவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.

அப்போது விமானத்தில் சீனாவை சேர்ந்த vascularஅறுவை சிகிச்சை மருத்துவர் Zhang உடனடியாக அவதிப்பட்டு வரும் அந்த பயணியிடம் வந்துள்ளார்.

அப்போது அவரை சோதித்து பார்த்த மருத்துவர், சிறுநீர் பையில் சுமார் 1,000 மில்லி லிட்டர் சிறுநீர் தேங்கி நிற்கிறது, அதை வெளியேற்ற வேண்டும், ஆனால் சாதரண விடயம் கிடையாது என்று கூறி, அதை எப்படி வெளியில் எடுப்பது என்பது பற்றி யோசித்துள்ளார்.

அதன் பின் ஆக்ஸிஜன் மாஸ், ஒரு ஊசி, வைன் பாட்டில், ஸ்ட்ரா மற்றும் டேப் ஒன்றை எடுத்தார். அவர் வயதான மனிதனின் சிறுநீர்ப்பையை ஒரு வித முறையில் அசைத்து, உள்ளே இருந்த சிறுநீரை வெளியேற்ற எண்ணினார், ஆனால் விமானத்தில் கேபின் இடம் குறைவாக இருந்ததால், அந்த சாதனம் சரியாக வேலை செய்ய முடியவில்லை.

நேரம் செல்ல, செல்ல வலி அதிகமானதால், உடனடியாக Zhang அவரின் சிறுநீர் பையில் இருந்து நேரடியாக வாய் வலியாக சிறுநீரை வெளியில் எடுக்க முடிவு செய்துள்ளார், ஊசி பயன்படுத்துவதை நிறுத்தினார்.

இதையடுத்து டியூப் வலியாக அவர் சிறுநீரகத்தை வெளியில் உறிஞ்சி, பாட்டில் ஒன்றில் துப்பினார். இப்படி சுமார் 700 முதல் 800 மில்லி லிட்டர் வரை உறிஞ்சி வெளியே எடுத்த பின்னர் அந்த பயணி சகஜ நிலைக்கு திரும்பினார். 37 நிமிட போராட்டத்திற்கு பின் இது சாத்தியமாகியுள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் இறங்கிய அந்த நபர் சாதரண செக் அப்பிற்காக கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து மருத்துவர் Zhang நான் அதைப் பற்றி எல்லாம் நினைக்கவில்லை, என்னுடைய எண்ணம் அவரை காப்பாற்ற வேண்டும் என்றே இருந்தது என் கூறி முடித்துவிட்டார்.

மருத்துவரின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சம்பவத்தின் வீடியோவை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொலிசாரை அழைத்து பீட்சா ஆர்டர் செய்த பெண்! புரிந்துகொண்ட பொலிசார் எடுத்த சரியான நடவடிக்கை!
Next articleஜனாதிபதிக்கு, முன்னாள் பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை!