சிறுநீருடன் புரதம் வெளியேறுகிறதா! சிறுநீரில் நுரையாக வருகிறதா? அலட்சியம் வேண்டாம் ! இதோ அதைக் குறைக்கும் இயற்கை வைத்தியம்!

0

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, எப்போதும் சோர்வாக உணர்வது, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, தலை சுற்றல், முகம் வீங்குவது, கை மற்றும் கால் வீங்குவது போன்றவை சிறுநீரக நோயின் அறிகுறிகள்.

நாள்பட்ட சிறுநீரக நோய்களின் அறிகுறிகள் பொதுவானதாக இருப்பதால், இவை பெரும்பாலும் கவனிக்காமல் விடப்படுகின்றன.

சோர்வாக உணர்வது

ஆரோக்கியமான சிறுநீரகம் எரித்ரோஃபோய்டின் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உடலுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது.

சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது, இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கிறது. இதனால் போதிய சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாமல் உடல் விரைவில் சோர்வடைகிறது.

சுவாசப் பிரச்சினைகள்

சிறுநீரகம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளில் இரண்டு விதத்தில் சம்பந்தப்படுகிறது. உடலில் அதிக அளவு திரவம் வெளியேற்றப்படாமல் இருப்பதால் அவை நுரையீரலில் சென்று சேர்கிறது.

மற்றொன்று, ரத்தசோகை ஏற்படுவதால் உடல் பிராண வாயுவிற்காக தவித்து மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது.

தலைசுற்றல் மற்றும் சோர்வு

சிறுநீரக செயலிழப்பு தொடர்பான அனீமியா என்பது மூளைக்கு ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லை என்று பொருள். இதனால் மயக்கம், தலைசுற்றல், உடல் சோர்வு போன்றவை உண்டாகலாம்.

வீக்கம்

உங்கள் கைகளில் அல்லது கால் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால், சிறுநீரக செயலிழப்பும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

செயலிழந்த சிறுநீரகத்தால் உடலில் உள்ள திரவத்தை வெளியேற்ற முடியாமல், அவை உடலில் தங்கி கை, கால், பாதங்களில் வீக்கம் உண்டாகலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? ஆம் என்றால் உங்களுக்கு சிறுநீரக நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம். சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது, அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது அல்லது சிறுநீர் வெளியேறும்போது ஒரு வித சிரமம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

சிறுநீரில் நுரை

சிறுநீரகத்தில் ஏதாவது நோய் இருந்தால் சிறுநீரில் நுரை அதிகமாக தோன்றும். சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது சிறுநீர் நிறம் மாறி, நுரையாகத் தோன்றும்.

சிறுநீரில் அளவுக்கு அதிகமான புரதம் இருந்தாலும் இப்படி நுரை அதிகமான சிறுநீர் வெளியேறும்.

நம் உடலுறுப்புகளில் சிறுநீரகம் என்பது மிக முக்கியமான உறுப்பாகும். அதனால் இந்த உறுப்பிற்கு மட்டுமே நாம் தனி கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனெனில் சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் உடல்வலி, சரும பிரச்சனைகள், தலைவலி ஆகிய பிரச்சனைகளை உண்டாகும்.

சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டியவை

தண்ணீரை தினமும் 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் குடித்து வந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராகும்.

குதிரைவாலியை நமது அன்றாட உணவு முறைகளில் சேர்த்து வந்தால், அது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்துவிடும்.

வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகிய பழங்கள் சிறுநீரகத்தை சுத்தம் உதவுகிறது.

மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்கலாம். எனவே மெக்னீசியம் நிறைந்த கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய புரோட்டின் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும், சிக்கன், மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதோடு, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் உணவு பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க புரோட்டீன் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்து. உடலில் உள்ள திசுக்களை உருவாக்கவும், சரிசெய்யவும் புரோட்டீன் பயன்படுத்தப்படுகிறது. எலும்புகள், தசைகள், குருத்தெலும்பு, தோல், மற்றும் இரத்தம் ஆகியவற்றின் முக்கியமான அடிப்படை அம்சமாக புரோட்டீன் இருக்கிறது. எனவே புரோட்டீனை ஒருவர் தினமும் போதுமான அளவு எடுக்க வேண்டியது அவசியம்.

அவ்வளவு முக்கியத்துவத்தைக் கொண்ட புரோட்டீன், ஒருவரது சிறுநீரில் அதிகமானால், அது சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதை குறிப்பதோடு, இதர ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான அறிகுறியும் கூட. பொதுவாக இரத்தம் சிறுநீரகங்களுக்கு செல்லும் போது, அதில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகப்படியான நீரை வடிகட்டும். சிறுநீரகங்கள் அதன் செயல்பாடுகளைச் செய்யத் தவறும் போது, இரத்தத்தில் சுற்றும் புரதம், இரத்தத்திற்குள் திரும்புவதற்குப் பதிலாக, சிறுநீரக வடிகட்டிகள் வழியாக சிறுநீரில் செல்கிறது.

பெரும்பாலும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தான் இப்பிரச்சனையின் அபாயம் அதிகம் உள்ளது. சிறுநீரில் புரோட்டீன் அதிகமாகும் போது, சிறுநீரக கோளாறு தீவிரமாகி, சிறுநீரகங்களை சேதமடையச் செய்துவிடும். இப்படிப்பட்ட நிலையை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முடியும். இக்கட்டுரையில் சிறுநீரில் உள்ள அதிகப்படியான புரோட்டீனைக் குறைக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுநீரில் புரோட்டீன் அதிகமாவதற்கான காரணங்கள்

 • உடல் வறட்சி
 • கடுமையான உடற்பயிற்சி
 • மன அழுத்தம்
 • காய்ச்சல்
 • கடுமையான குளிர் வெப்பநிலை

யாருக்கெல்லாம் இப்பிரச்சனையின் அபாயம் உள்ளது?

 • சர்க்கரை நோய்
 • உயர் இரத்த அழுத்தம்
 • அமிலோய்டோசிஸ்
 • பெர்கர் நோய்
 • இதய உள்ளுறையழற்சி
 • இதய செயலிழப்பு
 • ஹாட்ஜ்கின் லிம்போமா
 • லூபஸ்
 • மலேரியா
 • மைலோமா
 • ஆர்த்தோஸ்டேடிக் புரோட்டினூரியா
 • கர்ப்பம்
 • முடக்கு வாதம்
 • சிக்கிள் செல் இரத்த சோகை

சிறுநீரில் புரோட்டீன் அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்

 • நுரைப் போன்ற சிறுநீர்
 • மூச்சு விடுவதில் சிரமம்
 • அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்
 • களைப்பு
 • கை, கால் அல்லது முக வீக்கம்
 • சரும வறட்சி
 • தூங்குவதில் சிரமம்
 • விக்கல்
 • குமட்டல்
 • வாந்தி
 • கவனம் செலுத்த முடியாமை

இப்போது சிறுநீரில் உள்ள புரோட்டீனைக் குறைக்கும் இயற்கை வழிகளைக் காண்போம்.

உப்பு எடுப்பதைக் குறைக்கவும்

உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கலாம். ஆய்வுகளில் உணவில் உப்பைக் குறைத்ததன் மூலம் 22% சிறுநீரில் உள்ள புரோட்டீன் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. சோடியம் எடுக்கும் அளவு குறைவதால் இரத்த அழுத்தம் குறைவதுடன், சிறுநீரக செயல்பாடும் மேம்படும்.

சோயா புரோட்டீன்

சிறுநீரில் புரோட்டீன் அதிகம் உள்ள மக்கள் இறைச்சிகளில் இருந்து பெறும் புரோட்டீன் அளவைக் தவிர்த்து, சோயா புரோட்டீனை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் சிறுநீரில் புரோட்டீன் அளவு குறையும். ஆய்வுகளின் படி, 20% சோயா புரோட்டீன் எடுப்பதால், சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவு குறைவதோடு மட்டுமின்றி, சிறுநீரக செல்களைப் பாதிக்கும் சைட்டோகீன்களின் அளவைக் குறைக்க உதவும்.

ஆளி விதை

ஆளி விதையை அன்றாட டயட்டில் சேர்ப்பதன் மூலம், சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கலாம். ஆளி விதையில் உள்ள ஆல்பா-லினோலினிக் அமிலம் மற்றும் லிக்னன்கள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஆகவே அன்றாடம் ஆளி விதையை உண்ணும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் சிறுநீரில் புரோட்டீன் அதிகமாவதைத் தடுக்கலாம்.

மீன் எண்ணெய்

சிறுநீரில் புரோட்டீன் அதிகம் உள்ளவர்களுக்கு மீன் எண்ணெய் மிகவும் நல்லது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளாக செயல்பட்டு, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. மேலும் மீன் எண்ணெய் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

இரத்த சர்க்கரை அளவில் கட்டுப்பாடு

சர்க்கரை நோயாளிகளுக்கு இப்பிரச்சனை இருப்பது பொதுவான ஒன்று. ஒருவரது இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டால், அது சிறுநீரகங்களைப் பாதித்து, சிறுநீரில் அதிகளவு புரோட்டீனைத் தங்கச் செய்யும். எனவே இரத்த சர்க்கரை அளவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இதனால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட்டு, சிறுநீரில் புரோட்டீன் அளவு குறைய உதவி புரியும். ஆகவே சிறுநீரில் புரோட்டீன் அதிகம் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்று டயட்டில் கட்டுப்பாட்டுன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுழந்தை வேண்டாம்! ஆனால் அது வேண்டும் – எது சரியான நேரம்! கருமுட்டை முழுமையான வளர்ச்சி !
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 05.11.2019 செவ்வாய்க்கிழமை !