இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடைய சிறுநீரகம் மோசமான நிலையில் என்று தெரியுமா?

0

உடல் ஆரோக்கியம் என்று வரும் போது, அதில் சிறுநீரக ஆரோக்கியம் முதன்மையானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சிறுநீரகம் தான் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும் மற்றும் தினமும் 10-150 குவாட்ஸ் இரத்தத்தை வடிகட்டுகிறது.

மேலும் சிறுநீரகம் உடலில் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றும், எலக்டோலைட்டுகளின் அளவை சீராக பராமரிக்கும், இரத்த அழுத்தத்தை சீராக்கும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்யும்.

இவ்வளவு முக்கிய பணிகளைச் செய்யும் சிறுநீரகம் சரியாக இயங்காமல், நோயால் பாதிக்கப்பட்டு, ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காமல் விட்டால், அதனால் உயிரை இழக்கவும் நேரிடும். சரி, இப்போது சிறுநீரகம் மோசமான நிலையில் இருந்தால் தென்படும் அறிகுறிகள் குறித்து காண்போம்.

சிறுநீர் கழிப்பதில் மாற்றம்

சிறுநீர் கழிக்கவே முடியாமல் தவிப்பது, நுரையுடனான சிறுநீர் வெளியேற்றம், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது அழுத்தத்தை உணர்வது போன்றவை சிறுநீரகத்தில் கோளாறு உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

உடலில் வீக்கம்

சிறுநீரகம் சரியாக செயல்படாமல் இருந்தால், உடலில் உள்ள அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படாமல் தேங்கி, உடலில் ஆங்காங்கு வீக்கத்தை சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.

சுவை மாற்றம்

சிறுநீரக கோளாறு இருந்தால், இரத்தத்தில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, அதனால் வாய் துர்நாற்றம் அல்லது சுவையில் மாற்றத்தை உணரக்கூடும். சிறுநீரக பிரச்சனை முற்றிய நிலையில் இருந்தால், அவர்களால் உணவின் சுவையை உணர முடியாமல் இருப்பதோடு, பசியின்மையால் அவஸ்தைப்படுவார்கள்.

சோர்வு

இன்னும் சில நேரங்களில், சிறுநீரக நோய் இருந்தால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவும் ஹார்மோனின் அளவு குறைந்து, உடலில் உள்ள செல்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், உடல் மிகுந்த சோர்வடையும். இது அப்படியே நீடித்தால், அதனால் இரத்த சோகையால் கூட பாதிக்கப்படக்கூடும்.

முதுகு வலி

மேல் முதுகு பகுதியில் வலியை உணர்ந்தால், சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகங்களில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

மூச்சுவிடுவதில் சிரமம்

சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, அதனால் மூச்சுவிடுவதில் கூட சிரமத்தை உணர நேரிடும்.

தலைச்சுற்றல்

சிறுநீரகம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருந்தால், இரத்த சோகை முற்றி, அதனால் எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் போய், தலை பாரம், தலைச்சுற்றல் மற்றும் ஞாபக மறதி போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.

சரும அரிப்பு

சிறுநீரகம் சரியாக இயங்காமல் இருந்தால், சிறுநீரகங்களில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, சருமத்தில் கடுமையான அரிப்பை சந்திக்கக்கூடும். எனவே சருமத்தில் அரிப்பு கடுமையாக இருந்தால், சாதாரணமாக விட்டுவிடாமல், உடனே அதை கவனியுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் நிவாரணம்!
Next articleஉடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகை நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடி!