ஜாக்குவார் கார் ஒன்றையும் வாங்கினார் நடிகை திரிஷா !

0

நடிகை திரிஷாவின் வெறித்தனம்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. தற்போது அவர் 36 வயதை தொட்ட போதும் இன்னமும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே இருந்து வருகிறார். 

அவருடைய ஒல்லியான தோற்றம்,  சதை போடாத உடற்கட்டு,  வசீகர முகம், அவரை தமிழ் சினிமா மார்க்கெட்டில் தொடர்ந்து  உச்சத்திலேயே வைத்திருக்கிறது.  வாழ்க்கையில் மிகவும் கடினப்பட்டு விடாமுயற்சி,  மற்றும் கடின உழைப்பின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் திரிஷா. ஒரு நடிகை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் தாக்குப் பிடிப்பது மிகக் கடினம் என்ற நிலையில் சமீபத்தில் கூட அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஹீரோயினாக நடித்திருக்கிறார் அந்த அளவுக்கு த்ரிஷாவின் மார்க்கெட் இன்னும் அதே ரேஞ்சில் இருக்கிறது.  

திரிஷாவிற்கு வெறித்தனமாக பிடித்த விஷயங்கள் இரண்டு உள்ளது.  ஒன்று, விதவிதமாக நாய்கள் வாங்குவது. மற்றொன்று, சொகுசு கார்களை வாங்குவது, அவரிடம் ஏற்கனவே 2 சொகுசு கார்கள் இருக்கிறது.  அவருக்கு பிடித்த உயர்தர கார்களான மெர்சிடஸ் பென்ஸ்,  மற்றும் பி.எம்.டபிள்யூ,  எப்போதும் அவரது வீட்டு காரிடாரில்  நிற்குமாம்.

சமீபத்தில் தான் ஜாக்குவார் கார் ஒன்றையும் வாங்கினார் அம்மணி. இந்நிலையில், அதற்குள் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கவும் விண்ணபித்துள்ளார் என்று கூறுகிறார்கள்.சமீபத்தில் ஹன்ஷிகா மோத்வாணி ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியிருந்தார். இதனால், தானும் வாங்க வேண்டும் என்ற வெறியில் நடிகை திரிஷாவும் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க விண்ணப்பித்துள்ளார் என்று கூறுகிறார்கள்.


உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவைரலாகும் புகைப்படங்கள், இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியாமணி!
Next articleவெண்புள்ளிகளை அகற்ற வேண்டுமா இந்த இரண்டு இலைகளும் போதும் !